உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை

 சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை

சபரிமலை: 'ரோப்கார்' எனப்படும் கம்பியில் இயங்கும் போக்குவரத்து சேவையை சபரிமலையில் செயல்படுத்த, மொத்தம் 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என, 'ட்ரோன்' மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.பம்பையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இது, பக்தர்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால், 'ரோப்கார்' போக்குவரத்து சேவை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பலகட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ., துாரத்திற்கு 271 கோடி ரூபாய் செலவில், ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து துாண்கள் நிறுவப்படும். கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம், 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும். இன்று, வனவிலங்கு சரணாலய வாரியத்தின் கூட்டம் நடக்கிறது. இதில் முடிவு எடுக்கப்படும். அடுத்த மாதம் நடக்கவுள்ள மகரஜோதியின் போது, ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். பம்பையில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வற்காக இது நிறுவப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ரோப்கார் சேவையை பயன்படுத்தலாம். 'பெருவழி பாதையை தவிர்க்கவும்' சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை எதிர்கொள்வது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப்பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும். நிலக்கல் - பம்பை வழியாக வர வேண்டும். பெருவழிப் பாதை, புல்மேடு பாதையில் மீட்பு, மருத்துவ வசதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SIVAKUMAR HARIHARAN
டிச 09, 2025 13:09

Rope car is not adequate. we need an escalator!


அப்பாவி
டிச 09, 2025 11:33

ரோப் காரிலே ஏறின உடனேயே மாலை போட்டு இருமுடி கட்டி படியேறிடலாம்..


VENKATASUBRAMANIAN
டிச 09, 2025 08:15

நல்ல திட்டம். இதுவே லேட். வயதானவர்கள் சிறுவர்களுக்கு மிகவும உதவும்


Thravisham
டிச 09, 2025 07:58

இது நியாயமா? விட்டா எஸ்கேலேட்டர் வசதி செஞ்சு குடுத்துடுவானுங்க போல. கடுமையான விரதம் இருந்து வெறும் காலால் கல் முள் மண் என்று நடந்து சென்று படியேறி சுவாமி தரிசனம் செய்யும் திருப்தி வருமா? தரிசனம் என்பது என்ன fast foodaa?


சண்முகம்
டிச 09, 2025 07:58

சுற்றுலா தலமாக மாற்ற திட்டமா?


புதிய வீடியோ