உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் ஷோ ரூமில் ரூ.102 கோடி கறுப்பு பணப்பரிமாற்றம்: நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்பு!

கார் ஷோ ரூமில் ரூ.102 கோடி கறுப்பு பணப்பரிமாற்றம்: நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்பு!

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கார் ஷோரூமில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.102 கோடி அளவுக்கு கறுப்பு பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்பு உள்ளதால், அவர்கள் வருமான வரித்துறையினர் கண்காணிப்புக்குள் வந்து உள்ளனர்.கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பவர் ராயல் டிரைவ் என்ற பெயரில், கார் ஷோ ரூம் ஒன்றை நடத்தி வருகிறார். மலப்புரம், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் நகரில் கிளைகள் உள்ளன. வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இச்சோதனையில், அதில் ரூ.102 கோடி அளவுக்கு கறுப்பு பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் புதிதாக வாங்கிய சொகுசு கார்களை ஓரிரு ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு அதனை இங்கு விற்பனை செய்ததும். அதற்கு பதில், கணக்கில் காட்டாமல் கறுப்பு பணத்தை பெற்று கொண்டுள்ளனர். மேலும், இங்கு கார்களை வாங்கி கறுப்பு பணத்தை செலுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், அவர்கள் பயத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bye Pass
ஜூலை 07, 2024 08:31

போன வாரம் குஜராத் பெட் துவாரகா செண்டிருந்தேன் … கோவில் இருக்கும் பகுதிகளில் ஒரு சொட்டு குடிநீர் கிடைக்காது .. எந்த தானியமும் காய்கறிகளும் விளையாத பகுதி ..அந்த பகுதி மக்கள் யாரிடமும் கையேந்துவதில்லை … அதைப்போல நிறைய இடங்கள் குஜராத்தில் நிறைய இருக்கிரது


venugopal s
ஜூலை 07, 2024 05:50

குஜராத் பக்கம் போனால் தெருக்குத் தெரு இதுபோல் லட்சம் கோடிகளில் கறுப்புப் பணம் சிக்கும். என்ன செய்வது? அதற்கு பெரிய தலையின் ஒப்புதல் கிடைக்காதே!


நிக்கோல்தாம்சன்
ஜூலை 07, 2024 07:25

30000 கோடி ரூபாயை கார்பொரேட் குடும்பத்தின் வாரிசு என்ன பண்ணியிருப்பார் ? ஹம்மர் கார் போல செய்திருப்பாரா?


theruvasagan
ஜூலை 06, 2024 22:03

அது என்ன விளையாட்டு வீரர்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கற விளையாட்டு எது. அவனுகளும் நடிகனுகளும்தான் விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும். அவனுகளை கோடீஸ்வரன்களாக்கின தப்பு யாரோடது. அவங்க திருந்தினால்தான் நாடு உருப்படும்


அசோகன்
ஜூலை 06, 2024 21:08

தமிழ் நாட்டில் வந்து எங்க கருப்பு பணத்தை பிடிக்கவந்தா கள்ள சாராயம் ஊத்தி கொடுத்து கொன்றுவிடுவோம் ஜாக்கிரதை.....


Subash BV
ஜூலை 06, 2024 18:21

Be alert. Normally Indian Muslims Unpatriates. PUT the Bharat first.


chails ahamad
ஜூலை 06, 2024 16:16

தவறான சிந்தனைகள் அறவே , வேண்டவே வேண்டாமே , தவறிலைத்தவர் யாராகயிருப்பினும் , தண்டிக்கப்பட வேண்டியவர்களே.


NAGARAJAN
ஜூலை 06, 2024 16:00

ஆமாம் தமிழகத்தில் பாஜக தலைவர்களிடம் சோதனை செய்தால் நிச்சயம் நிறையவே மாட்டும். . ஆனால் செய்ய மாட்டார்கள். .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 07, 2024 07:26

துபாய்க்கு குடும்பத்தோடு போன தலைவரை விட்டுடீங்களே


வாய்மையே வெல்லும்
ஜூலை 06, 2024 15:17

என்னங்க கட்டா கட் கட்டா கட் க்கு வந்த சோதனை..


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 14:17

தமிழகம் பக்கம் வந்தால் இது போல ஆயிரம் பேரை பிடிக்கலாம். குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.


அப்புசாமி
ஜூலை 06, 2024 14:17

இதுமாதிரி விஷயங்களை அவிங்க மட்டும்தான் செய்வாய்ங்க.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ