உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2,000 நோட்டு செல்லும்: ரிசர்வ் வங்கி தகவல்

ரூ.2,000 நோட்டு செல்லும்: ரிசர்வ் வங்கி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், இதுவரை 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்பின், ஒரு வாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் ரூ.2000 நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிச.,29ம் தேதி, ரூ.9,330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது, 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ROJA
ஜன 02, 2024 12:14

தெளிவற்ற நிலை


G.Prabakaran
ஜன 02, 2024 12:00

ஐயய்யோ அப்புறம் எதற்காக ரூ 2000 திரும்ப வாங்குனீங்க யார் கிட்டயாவது பல கோடிகள் மாற்றாமல் உள்ளதா.


Sridhar
ஜன 02, 2024 10:32

"செல்லும்" என்றால் அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், கால வரம்பிற்குள் வங்கிக்குள் செலுத்தமுடியாத நோட்டுகள் மதிப்பிழந்து நஷ்டப்பட்டுவிட்டோம் என்று கவலை கொள்ள தேவையில்லை. கொள்ளை அடித்தே பழக்கப்பட்டுவிட்ட திராவிட திருட்டு கும்பலுக்கு இந்த அறிவிப்பு புரியாதுதான். ஆனால் புரியும்போது சந்தோஷமடைவார்கள்.


தமிழ்வேள்
ஜன 02, 2024 11:07

மாற்றிக்கொள்ளலாம் ..ஆனால் அத்தனைக்கும் கணக்கு காட்டவேண்டும் .... வருமானவரி துறை உடனடியாக களமிறங்கும் ..திருட்டு திராவிடம் தெரிந்தே வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளாது ...


venugopal s
ஜன 02, 2024 09:48

செல்லும் ஆனால் செல்லாது இதற்கு என்ன அர்த்தம்? வரும் ஆனால் வராது என்ற காமெடி போல் உள்ளதே!


Rajarajan
ஜன 02, 2024 06:33

எல்லோரும் அரசை குறை சொல்கின்றனர். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசியல்வாதிகள், இந்த நோட்டுக்களை பதுக்குவதால் தானே பிரச்சினையே வருகிறது. எனவே, நாம் குறைசொல்ல வேண்டியது, இவர்களை தேர்ந்தெடுத்த நம்மை தானே தவிர, அரசை அல்ல. நாம் என்றைக்காவது, நமது தொகுதி MLA / MP யின் சொத்துப்பட்டியலை கேட்டிருப்போமா ?? அவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிந்தும், அவர் பெயர் வெளியே வந்தும், இரண்டாயிரம் நோட்டுக்கள் மூட்டை மூட்டையாக பிடிப்பட்டதை பார்த்தும், நமது நவதுவாரத்தை மூடக்கிக்கொண்டு தானே இருக்கிறோம். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.


Ramesh Sargam
ஜன 02, 2024 00:38

97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.... ஆக மீதி உள்ள நோட்டுகள் திரும்ப வரும்வரை அந்த நோட்டுக்கள் செல்லும். நூறு சதவிகிதம் கிடைத்தபின் அறிவிப்பு மாறலாம்.


N Annamalai
ஜன 01, 2024 22:54

ஒன்னும் புரிய வில்லை .மக்களிடம் என்ன சொல்ல வருகிறார்கள் ?.


g.s,rajan
ஜன 01, 2024 22:20

அப்பு ....அப்போ இந்தியாவில் கறுப்புப்பணத்தைக் கைப்பற்றி அந்தப் பதினைந்து லட்சம் கண்டிப்பா எல்லா மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது....


வாய்மையே வெல்லும்
ஜன 02, 2024 09:29

பதினைந்து சட்டை அடி வேணா கிடைக்கும் வாங்கிட்டு திராவிடன் பெருமை வீர தீர பேச்சு மேடையில் பேசலாம் .. சோம்பேறி கூட்டம் / இலவசத்துக்கு அலைபவன் திராவிடன் என்பது நிரூபணம்


Vijay D Ratnam
ஜன 01, 2024 21:57

நல்ல விஷயம். டெக்னீக்கா செய்து இருக்கிறார்கள். 98 சதவிகிதம் ரெண்டாயிரம் ரூபாயை திரும்ப பெற்றுவிட்டார்கள். வெறும் இரண்டு சதவிகிதம் ரெண்டாயிரம் ரூபாய் தான் புழக்கத்தில் இருக்கிறது. அதுவும் பேங்க்களுக்கு செல்லும்போது அதுவும் முடக்கப்படும். இந்தியாவின் அதிக மதிப்புள்ள கரென்சியாக ஐநூறு ரூபாய் இருப்பதே நல்லது.


தமிழ்வேள்
ஜன 02, 2024 11:08

அதிக மதிப்புள்ள கரன்சியாக இருநூறு ரூபாய் நோட்டுக்கள் போதுமானவை ....


J.Isaac
ஜன 01, 2024 21:18

குரங்கு புத்தி


மேலும் செய்திகள்