உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடகிழக்கு மாநிலங்களில் 11 ஆண்டுகளில் கல்விக்காக ரூ.21,000 கோடி முதலீடு

வடகிழக்கு மாநிலங்களில் 11 ஆண்டுகளில் கல்விக்காக ரூ.21,000 கோடி முதலீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோஹ்பூர்: ''கடந்த, 11 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில் கல்விக்காக மத்திய அரசு, 21 ,000 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள போலகிரியில், புதிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பல்கலை உருவாக உள்ளது. மொத்தம், 241 ஏக்கர் பரப்பளவில், 7 லட்சம் சதுர அடியில், 415 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும், ஸ்வாஹித் கனகலதா பருவா பல்கலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றது முதல் வடகிழக்கு பகுதியில் கல்வித் துறைக்காக, 21 ,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 850க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்துள்ள-து. மேலும், 200க்கும் மேற்பட்ட புதிய திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நாட்டின் முதல் விளையாட்டு பல்கலையும் இந்த பகுதியில் உருவாகி உள்ளது. அசாமில் மட்டும், 15 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தெற்காசியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையம் இங்கு உருவாகியுள்ளது. இங்கு, இரண்டாவது ஐ.ஐ.எம்., எனப்படும் மேலாண்மை உயர்கல்வி நிறுவனம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகளை மேம்படுத்துவதுடன், விமான போக்குவரத்து மற்றும் ரயில்வே துறைகளிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் 10 புதிய பசுமை விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் ரயில்வே வரைபடத்தில், முதன்முறையாக மணிப்பூர் மற்றும் மேகாலயா இணைக்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர் கனகலதா பருவா பெயரில் புதிய தொழில்நுட்ப பல்கலை வடகிழக்கு பகுதியில் துவங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பல்கலை எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த வழி காட்டியாக விளங்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.n. Dhasarathan
நவ 09, 2025 10:13

மேடம், 35000 கோடியை அதாநீ க்கு எல்.ய் .சி மூலம் முதலிடு என்று மக்கள் பணத்தை வாரி கொடுத்து, இழந்ததை பற்றி ஏன் ஒரு வார்த்தை பேசாமறுக்கிறீர்கள் ?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 09:31

காங்கிரஸ் காலத்திலேயே அங்கு ஐ ஐ டி என் ஐ டி எல்லாம் வந்துவிட்டது. நீங்கள் கொடுத்த பணம் அவர்கள் கட்டிய வரியின் பங்குதான். கிடைத்த பலனை பட்டியலிடுங்கள், செப்டம்பர் 22 க்குப்பின் விலைவாசி அதலபாதாளத்துக்கு போனதுமாதிரி


முதல் தமிழன்
நவ 09, 2025 08:18

கொள்ளை அடிக்க ஒதுக்கப்பட்ட நிதி.


அப்பாவி
நவ 09, 2025 06:46

21000 கோடி. எவனெல்லாம் ஆட்டையப் போட்டானோ?


vivek
நவ 09, 2025 06:31

திராவிட சமச்சீர் கொத்தடிமைகள் இப்போது கதறும்


Kasimani Baskaran
நவ 09, 2025 06:30

வெள்ளைக்காரர்கள் கிழக்கு பாகிஸ்தான் என்று பிரித்து சுதந்திரம் கொடுக்கும் பொழுதே வடகிழக்கு மாநிலங்கள் பற்றி திட்டமிட்டே அதை இந்தியாவை விட்டு தனித்தே வைத்தார்கள். வெள்ளைக்காரர்களின் எண்ணம் போலவே இந்தியா சிதைந்து போக காங்கிரஸ் பல காலமாக கடுமையாக உழைத்தது. ஊடுருவல்க்காரர்களை பெருமளவில் உள்ளே விட்டு காங்கிரஸ் மற்றும் மம்தா போன்றோர் ஆட்சியை தக்கவைக்கு முயல்கிறார்கள். வளர்ச்சி வரும் பொழுது தீய சக்திகள் தலையெடுக்க முடியாது.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 09:27

இப்படி அடுத்தவனை குத்தம் சொல்லியே நாம பதினோரு வருஷம் ஒட்டு வாங்கி பதவியை தக்க வச்சுட்டோமில்லே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை