உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய்: லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய்: லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகளை ரயில்வே பிடித்துள்ளது, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய் ஈட்டியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதிலளித்து கூறியதாவது:கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரயில்வே கண்டறியப்பட்டனர். மேலும் இந்த பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் (அபராதம்) ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ-அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளை கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் இல்லாத பயணிகள் பதிவாகியுள்ளனர்.டிக்கெட் இல்லாத பயணம் ரயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளை குறைக்கவும், ரயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Varuvel Devadas
மார் 27, 2025 11:10

What is the great policy of India?


Ramesh Sargam
மார் 27, 2025 01:36

அன்றைக்கு அந்த கருப்பு கண்ணாடிக்காரர் பிடிபட்டிருந்தால், இன்றைக்கு தமிழகம் இந்த நிலமைக்கு ஆகி இருக்காது.


Appa V
மார் 27, 2025 00:33

கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்க இன்னமும் அதிக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் சானிடைசர்கள் நாப்கின்கள் சீட் மேல் உட்காரும் முன் வைக்க காகித கவர் போன்றவை ஐந்து ரூபாய் கட்டணத்தில் வழங்கலாம் கேண்டின் மற்றும் பென்ரி கார்களிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை முறையாக சேமித்து ஸ்டேஷன்களில் இறக்கி விடலாம்


தாமரை மலர்கிறது
மார் 26, 2025 22:45

வெரி குட். அடுத்த முறை இதைவிட பத்து மடங்கு அதிகம் வசூலிக்க வாழ்த்துக்கள். திருடர்களை சும்மா விடக்கூடாது. கடுமையான அபராதம் போடுவதன் விளைவாக திருட்டு ரயிலேறி வருபவர்களின் தொந்தரவு குறையும்.


சுரேஷ்சிங்
மார் 26, 2025 22:40

உ.பி, பிஹார்லதான் வித்தவுட்டுங்க அதிகமாம். அங்கிருந்து இந்தி படிச்சிட்டு திருட்டு ரயிலில் பஞ்சம் பிழைக்க வந்துடறாங்க. நமக்கும் இந்தி கத்துக்கணுமாம்.


karupanasamy
மார் 27, 2025 04:04

திருவாரூரிலிருந்து சென்னைக்கு வித்தவுட்டுல வந்தாரே?


புதிய வீடியோ