உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.59 கோடி போதைப்பொருள் கர்நாடகாவில் தீயிட்டு அழிப்பு

ரூ.59 கோடி போதைப்பொருள் கர்நாடகாவில் தீயிட்டு அழிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 59.16 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் நேற்று அழிக்கப்பட்டன.கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'கர்நாடகா வேஸ்ட் மேனேஜ்மென்ட் புராஜெக்ட்' என்ற குப்பை அழிப்பு மையம் அமைந்துள்ளது. நேற்று இங்கு, 'போதைப் பொருள் இல்லா கர்நாடகா' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இதை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது:போதைப் பொருள் இல்லா கர்நாடகாவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கும்படி, எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவை போதைப் பொருள் இல்லா மாநிலமாக்க, முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இந்த வழக்கில் கைதானவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்.மாநிலத்தில் 59.16 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை அழிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.போதைப் பொருள் முழு சமுதாயத்தையும் நாசமாக்குகிறது. குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை