உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடில்லி: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2025-26ம் நிதியாண்டில் 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அ.திமு.க.,உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி இருந்தன.இந்நிலையில் டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:கடந்த 2009-14 காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சிகாலத்தில் , தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.தற்போது 2025-26 பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு என ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2009- 14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 879 கோடி ரூபாயை காட்டிலும், 654 சதவீதம் அதிகமாகும்.இதில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.மொத்தமாக2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33.467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள் மற்றும் 9 இரட்டை வழி பாதை திட்டங்கள் அடங்கும். இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும் அகலப் பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும் இரட்டை வழி பாதைக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட திட்டங்களுக்கு ரூ.1,536 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mahendran Puru
பிப் 04, 2025 10:52

வந்தே பாரத் மந்திரி பல்டிக்கு பெயர் போனவர். சொல்கிறார், பார்ப்போம். ஆனாலும் தமிழக தமிழின விரோதி அரசு மத்திய அரசு.


VENKATESH PP
பிப் 05, 2025 05:25

ரூபாய் 200 வந்துடும்


PARTHASARATHI J S
பிப் 04, 2025 09:21

நடுவண் அமைச்சர் விமர்சனங்களை நிதானமாக பொறுப்பாக எடுத்துக் கொண்டு முகமலர்ச்சியோடு பேட்டி கொடுப்பது அழகே அழகு.


தாமரை மலர்கிறது
பிப் 03, 2025 23:41

ஒட்டு போடாத தமிழர்களை புறக்கணிப்பது நல்லது.


அருணாசலம்
பிப் 03, 2025 21:28

மீதி ரூபாய் 2109 கோடிக்கு எங்கே கணக்கு?


K.n. Dhasarathan
பிப் 03, 2025 20:57

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று முதல்வர் கேள்வி எழுப்பியதும் வருகிற பதிலா அல்லது நிஜமாலுமே ஒதுக்கப்பட்டதா ? இன்னுமே விவரம் சரியாக வரலையே, மெட்ரோ திட்டங்களுக்கு எவ்வளவு என்று இல்லை, அதாவது ஒன்றுமே இல்லை, சரிதானே அடுத்து பத்து புதிய ரயில் பாதைகளுக்கு 426 கோடி யாம், எதற்கு சும்மா கண் துடைப்பிற்கா ? சர்வே பண்ணுவதற்கே பத்தாதே அல்லது நானும் பதில் சொன்னேன் என்பதா ? இது ஒரு வெட்டி பட்ஜெட் என்பதை நன்றாகவே சொன்னீர்கள்.


Bhaskaran
பிப் 03, 2025 20:02

புதிய திட்டங்கள் ஒன்னும் கிடையாது பிஹார் ஆந்திராவுக்கு மஹாராஷ்டிரத்துக்கு தருவாங்கோ. நாற்பது தண்டம் பேசுகிறார் கத்திவிட்டு கேன்டீனில் கோழிக்கறி சாப்பிடுவானுவ


G Mahalingam
பிப் 03, 2025 19:58

இப்போது யாரும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கூகுல் தேடி பாருங்க. விபரம் கிடைக்கும்.


VENKATASUBRAMANIAN
பிப் 03, 2025 19:10

இதை பாஜகவினர் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் திமுக பொய் சொல்லுவது தெரியும். சும்மா அறிக்கை விட்டால் மட்டுமே போதாது.


Kasimani Baskaran
பிப் 03, 2025 18:57

வெள்ளைக்காரன் மீட்டர் கேஜ் தடங்களுடன் தமிழகத்தை பின்னுக்குத்தள்ளி விட்டு சென்றான். திராவிடர்களின் கடும் உழைப்பில் சிலைகளும் கல்லறைகளும் கட்டப்பட்டனவே தவிர மீட்டர் கேஜை மாற்ற துரும்பைக்கூட தூக்கி போடவில்லை. இன்றும் வெளிநடப்பு, கேன்டீன் என்று இருக்கிறார்களே தவிர மாநில நலன் ஒரு பொருட்டே அல்ல. அண்டை மாநிலத்தவர்கள் கூட அவரவர் மாநிலத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள்.


Raaj Vishwak
பிப் 04, 2025 17:29

Aiyo! Ensuring accurate and reliable information is crucial, especially when it comes to budget allocations and public communication. News channels and other media sources have a responsibility to verify their details before publishing to maintain trust and credibility. Budget announcements can be complex and involve many intricate details. It’s important for government officials and the media to communicate these clearly to avoid misunderstandings.


ஆரூர் ரங்
பிப் 03, 2025 18:23

மகன் மருமகனுக்கு கட்டிங் வராத வரை அப்படிதான் பேசுவார். பட்ஜெட் டை சுருக்கமா தெலுங்குல துண்டு சட்டில் கொடுத்திருந்தா ஒருவேளை புரிந்திருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை