உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.750 கோடி கடன் வாங்கி மோசடி : சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு

ரூ.750 கோடி கடன் வாங்கி மோசடி : சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : உத்தர பிரதேசத்தில், 750 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., வினய் ஷங்கர் திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். உத்தர பிரதேசத்தில், சாலை கட்டுமான பணி மற்றும் சுங்க சாவடி பராமரிப்பு பணிகளில் கங்கோத்ரி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனம், கடந்த 2012 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில், பாங்க் ஆப் இந்தியாவின் கீழ் செயல்படும் ஏழு வங்கிகளில் 1,129 கோடி ரூபாய் கடன் பெற்றது. அதில் ஒரு பகுதி மட்டுமே திருப்பி செலுத்தப்பட்டது. இதனால், வங்கிகள் கூட்டமைப்புக்கு 754 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பணமோசடி வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர், இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டனர். இதன் ஒரு பகுதியாக, கங்கோத்ரி நிறுவனத்தின் முக்கிய பிரமுகரான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-., வினய் ஷங்கர் திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.உ.பி..யில் லக்னோ, கோரக்பூர் மற்றும் நொய்டா, குஜராத்தில் ஆமதாபாத், ஹரியானாவில் குருகிராம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

shyamnats
பிப் 24, 2024 09:44

ஒரு நபர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் கடன் வாங்குவதை இப்போதுள்ள வளர்ந்த விஞ்ஞான தொழில் நுட்பங்களால் கட்டுப்படுத்த முடியாதா என்ன ? ஒரே சொத்தை ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு விற்பது போன்றதுதான் , ஒரே புரொஜெட்டை காட்டி பல வங்கிகளில் கடன் வாங்கி போடுவதும். மீண்டும் வங்கிகளை கொள்ளையடிப்பது தடுக்க பட வேண்டும்.


Priyan Vadanad
பிப் 24, 2024 03:15

கடன் கொடுத்தவர்களை மட்டும் விட்டுவிடுகிறார்கள் என்பது புரியவில்லை,


Ramesh Sargam
பிப் 23, 2024 23:51

ஒரு சாமானியன் அவனுடைய அவசர தேவைக்காக ஒரு ஐந்து லட்சம் கடன் கேட்டால் வங்கிகள் கொடுக்காது. ஆனால் இப்படி கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கு கடன்கொடுத்து ஏமாந்துபோகும்.


Bye Pass
பிப் 23, 2024 23:00

திவாரி சங்கி கூட்டத்தில் சங்கமிப்பார்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை