உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2 கோடிக்கு ஏலம் போன தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள்

ரூ.2 கோடிக்கு ஏலம் போன தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ரூ. 2 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியகியுள்ளது.மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளது.இந்நிலையில் ரத்னகிரி மாவட்டத்தில் தாவூத்தின் இரண்டுசொத்துக்கள் இன்று (05ம் தேதி) ஏலம் விடப்பட்டன. இதில் இரு சொத்துக்கள் முறையே ரூ. 2.01 கோடி மற்றும் ரூ. 3.28 லட்சத்திற்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு மும்பாகே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராஹிமின் மூதாதையர்களுக்கு சொந்தமான வீடு , நிலம் உள்ளிட்ட 6 சொத்துகள் ஏலத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நரேந்திர பாரதி
ஜன 06, 2024 05:11

ஏலம் எடுத்தது ஒருவேளை சித்திரக்குள்ளனாய் இருக்குமோ?


Seshan Thirumaliruncholai
ஜன 05, 2024 21:21

தாவூது சொத்து ஏலம் விடப்பட்டது சரி. அரசியல்வாதிகள் குறிப்பாய் அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளை பணம் அவர்கள் சிறையில் இருந்தால் மட்டும் போதாது. அதனை அனுபவிக்கும் நண்பர் குடும்ப உறுப்பினர்களும் சிறைக்கு செல்வது உறுதி என்றநிலைக்கு சட்டம் வேண்டும். இதனை அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள். இதுதான் மக்கள் தலையெழுத்து.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை