உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.36 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.1.36 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை,: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து, கடந்த 7ம் தேதி இரவு பயணி ஒருவருடன், விமான நிலைய ஊழியர் வெளியேறினார். அங்கிருந்த சுங்கத்துறை ஊழியர்கள் விமான நிலைய ஊழியர் வைத்திருந்த பேக்கை வாங்கி சோதனையிட்டனர். அந்த பேக்கில் இருந்த உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த மெழுகில், 1.800 கிலோ எடையுள்ள தங்க துகள்கள் இருப்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட அந்த தங்கத்துகள்களின் மதிப்பு 1.36 கோடி ரூபாய். பிடிபட்ட விமான ஊழியரிடம் நடத்திய விசாரணையில், விமான பயணி தங்கம் கடத்தி வந்த பேக்கை தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து விமான பயணி மற்றும் விமான நிலைய ஊழியர் ஆகிய இருவரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை