உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு; தரிசனத்துக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு!

சபரிமலை பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு; தரிசனத்துக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்; சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இணையம் மூலம் முன்பதிவு செய்யும் போது எந்த வழியாக யாத்திரையை மேற்கொள்வது என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.இம்முறை நிலக்கல், பம்பை பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Palanisamy Narayanasamy
அக் 07, 2024 11:36

48 நாட்கள் விரதமிருந்து பக்தியுடன் தரிசனத்துக்கு வரும் என் போன்ற தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களை ஷூ காலால் எட்டி உதைக்கவும், சந்நிதானத்தில் கழுத்தை பிடித்து தள்ளவும், ஒருமையில் திட்டி கேவலப்படுத்தவும், உங்கள் போலீஸ்காரர்களுக்கு உரிமையும் உத்தரவும் சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் கொடுத்தாச்சா என்பதை மறுபடியும் சரிபார்த்து கொள்ளுங்கள். பக்தர்கள் போட்டிருக்கும் மாலையும், பக்தர்கள் கடைபிடிக்கும் விரதமும் மட்டுமே அந்த காவலர்களை காப்பாற்றுகிறது ...


ANUB KITAN GUNASEKAR
அக் 07, 2024 10:42

ரெஸ்ட் ரூம், ரெஸ்ட் ரூம் கிளீனிங் மற்றும் செல்வதற்காக குடிநீர் விநியோகம் முக்கியம்


Tensingh
அக் 06, 2024 19:18

ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான் சொல்லுவாங்க, ஆனா பதிவு செய்யாதவர்களும் எல்லா வருஷமும் போய்கிட்டு தான் இருக்காங்க.


Palanisamy Narayanasamy
அக் 07, 2024 11:39

சென்றால் போலீஸ்காலால் மிதியும், கையால் அடியும் தான் நிச்சய பிரசாதம்.. சென்ற ஆண்டு போல...


Balamurugan v
அக் 06, 2024 13:36

நியூஸ் sema


pmsamy
அக் 06, 2024 08:56

??????


Thangaraj Mariappan
அக் 08, 2024 10:44

பெரிய பாதையில் செல்பவர்களுக்கு கையில் டோக்கன் கட்டி தனி வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா.


சமீபத்திய செய்தி