உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விலங்குகளை பலியிட்டு யாகமா? சிவகுமார் புகார் குறித்து விசாரணை

விலங்குகளை பலியிட்டு யாகமா? சிவகுமார் புகார் குறித்து விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'கேரளாவில் கர்நாடக அரசுக்கு எதிராக, விலங்குகளை பலியிட்டு, அகோரிகளை வைத்து சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டுள்ளது' என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதை மறுத்துள்ள கேரள அமைச்சர் பிந்து, இது குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சிவகுமார் துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில், 'கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக கேரளாவில் அகோரிகளை வைத்து பறவைகள், விலங்குகளை பலியிட்டு சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டுள்ளது' என சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: முதல்வர் சித்தராமையா மற்றும் எனக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் 'சத்ரு பைரவி' யாகம் நடத்தியுள்ளனர். கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோவிலின் அருகில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதை யார் நடத்தியது? யார் யார் இந்த யாகத்தில் பங்கேற்றனர் என்பது குறித்து தெரியும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது.இதை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக நம்பத்தகுந்த தகவல் என்னிடம் உள்ளது. கேரளாவில் மாந்திரீக சடங்குகள், யாகங்கள் நடத்தியவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் அது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். கர்நாடக அரசியலைச் சேர்ந்தவர்கள்தான், இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது. நாள்தோறும் கடவுளை வணங்கிவிட்டு தான் எந்த செயலையும் செய்வேன். எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால், இந்த யாகமெல்லாம் ஒன்றும் செய்யாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். துணை முதல்வர் சிவகுமாரின் குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள மாநில சமூக நீதி அமைச்சர் பிந்து, சிவகுமாரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ''நாட்டின் பிற பகுதிகளில் சமூகத்தை இருண்ட யுகத்துக்கு இழுக்கும் முயற்சியாக, இதுபோன்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ''ஆனால், கேரளாவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு வாய்ப்பில்லை. இருப்பினும், சிவகுமார் கூறியதுபோல் இதுபோன்ற யாகங்கள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,'' என, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூன் 01, 2024 12:47

9000 சீக்கியர்களை பலியிட்டு தேர்தலில் வென்றதை மறக்கவே முடியாது.


Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:41

அரசியல் சூனியவாதிகளை அழிக்க, ஆன்மீக சூனியவாதிகள்... ஆகா... பேஷ் பேஷ்...


Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:40

கர்நாடக காங்கிரஸ் அரசு, மாநில மக்களுக்கு எந்தவிதத்திலும் உபயோகமில்லாத ஒரு அரசு.


Lion Drsekar
ஜூன் 01, 2024 10:14

எல்லாமே பொய். இரு துருவங்கள் கொடிகட்டி வாழ்ந்தார்கள் , இவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் சட்டம் சிக்கல் , போராட்டம், மற்றொருவர் இதுபோன்று பல லட்சம் செலவில் யாகம் முடிவு இருவருமே இன்று இல்லை. நடக்கப்போவதை குறித்து சிந்தித்து ஆட்சி நடத்தினால் நாட்டுக்கு நல்லது . வந்தது


Sampath Kumar
ஜூன் 01, 2024 08:45

இப்படி சொல்லி கொன்டே போகலாம் அவனுக செய்தல் மட்டும் எல்லாமா ஓகே வாம் மற்றவர் செய்தால் போங்க நீங்களும் உங்க யாகமும்


jayvee
ஜூன் 01, 2024 07:41

எதையாவது சொல்லிக்கொண்டே காங்கிரசை மட்டுமல்ல மக்களையும் ஏமாற்றுவது தான் பணபொக்கிஷம் சிவகுமாரின் வேலை


Kasimani Baskaran
ஜூன் 01, 2024 07:34

காங்கிரஸ் கட்சி கர்மா என்ற விஞ்ஞானத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் இருக்கிது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ