மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
பெங்களூரு : சாய் செரினிட்டி லே - அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்க நினைப்பவர்களை, எச்சரிக்கும் வகையில், பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்துள்ளது.பெங்களூரு கே.ஆர்., புரம் சாய் செரினிட்டி லே - அவுட்டில், மாநகராட்சி அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அந்த குடியிருப்புகளில் இருக்கும் வீடுகளை, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்தபோது, சட்டவிரோத அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டட உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் சாய் செரினிட்டி லே - அவுட்டில், மாநகராட்சி அதிகாரிகள் வைத்து உள்ள எச்சரிக்கை பலகையில், 'மாநகராட்சி அனுமதி பெறாமல், இங்கு கட்டப்பட்டு உள்ள, சில அடுக்குமாடி குடியிருப்புகளில், எந்த அடிப்படை வசதியும் இல்லை. அங்கு வீடு வாங்கும் முன்பு, ஆவணங்களை முழுமையாக சரிபாருங்கள்' என்று கூறப்பட்டு உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago