உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்

அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வண்ணம், அனைத்து வகை புதிய ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=48aan7ay&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொபைல்போன் பயனாளர்களை உளவு பார்க்கவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தன. இந் நிலையில் சஞ்சார் சாத்தி செயலி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நிருபர்களிடம் கூறியதாவது;உங்களுக்கு இந்த செயலி வேண்டாம் என்றால் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அதை செய்து கொள்ளலாம். இந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டியது எங்களின் கடமை. ஆனால் இதை அவரவர் செல்போன்களில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதை அதை பயன்படுத்துவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
டிச 02, 2025 21:04

ரொம்ப சிம்பிள் .... நம்பிக்கை இருந்தால், விரும்பினால் செயலியைப் பயன்படுத்துங்கள் .... இல்லாவிட்டால் நீக்கிவிடுங்கள் .....


தாமரை மலர்கிறது
டிச 02, 2025 21:00

நாட்டு மக்களுக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்க கூட அரசுக்கு உரிமை இல்லையா? எதிர்க்கட்சிகளின் அட்டூழியம் தாங்க முடியவில்லை.


GMM
டிச 02, 2025 19:46

சஞ்சார் செயலை ஒரு முதலுதவி பெட்டி போன்று தோன்றுகிறது. கட்டாயம் ஆக்குவது தவறில்லை. முதலில் சிம், மொபைல் உண்மை தன்மையை அறிந்து கொள்கிறது. பயனாளி பெயர் மற்றும் சிம் எண் மட்டும் கேட்கிறது. உளவு என்றால் செல் நிறுவனம், பல ஆப் போன்றவை எளிதில் பார்க்க முடியும்? உளவு பார்க்க செயலியில் வாய்ப்பு பற்றி வல்லுநர் தான் அறிய முடியும். அரசு உளவு பார்ப்பதில் தவறு இல்லை.


MARUTHU PANDIAR
டிச 02, 2025 19:44

இப்படித் தான் கொரோனாபரவிய பொழுது நம் நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியின் அவசியம், அதன் பலிதம் இவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தத்தில் நக்கலாக கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு கலாட்டா செய்தானொருத்தர். அதை விட ஒரு படி மேலே போய் ஜனாதிபதி இன்னும் போட்டுக்கலையா, பிரதமர் எப்போது போட்டுக் கொள்ளப் போகிறார் என்றெல்லாம் ஓவர் கிண்டல் கேள்விகள் கேட்ட படி இருந்தான். அப்புறம் என்னாச்சு? எல்லாத்துக்கும் உயிர் மேல் ஆசைன்னு தெரிஞ்சுது இல்லையா?


MARUTHU PANDIAR
டிச 02, 2025 18:40

எப்படியாவது மக்களுக்கு அரசு நல்லதை செய்து மக்கள் பயன் அடைவதை இந்த கும்பல் எப்போ எதிர்க்காம இருந்திருக்கு? எஸ்.ஐ.ஆர் மூலமும் கள்ள குடியேறிகளின் ஓட்டு வங்கி பறிபோவதைதடுக்க என்னவெல்லாம் செய்யுறானுக?


P. SRINIVASAN
டிச 02, 2025 17:25

என்ன சன்சர் கின்சார் சொல்லிக்கிட்டு... ஒன்னு தமியிலே சொல்லணும் இல்லனா ஆங்கிலதில் சொல்லணும். இது என்ன சாங்கி பாஷை


SUBBU,MADURAI
டிச 03, 2025 03:22

உனக்கு தமிழையே சரியாக உச்சரிக்க தெரியவில்லை ....


Suppan
டிச 02, 2025 16:03

என்ன தமிழ் ஐயா இது ? உங்கள் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணம் உங்கள் ஆதாரைத்திருடி வேறு யாரவது சிம் கார்ட் வாங்கினால் உங்களுக்குத்தெரிய வரும் . உங்கள் மொபைல் திருடு போனால் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்த முடியாதபடி தடுக்கலாம். . பழைய மொபைலை வாங்கினால் அது திருடப்பட்டதா அல்லது ன்மையானதா என்று தெரிந்து கொள்ளலாம் சைபர் கிரிமினல்கள் நம்பர் தெரிய வந்தால் அதை உள்ளிடலாம். திருடர்கள், சைபர் கிரிமினல்கள், கள்ளக்கடத்தல்காரர்கள், போதை மருந்து கடத்தி விற்பவர்கள், திவீரவாதிகள் போன்றவர்களுக்கு இதைப்பற்றிய பயம் இருக்கும். மற்றவர்களுக்கு பாதுகாப்புதான்


சிந்தனை
டிச 02, 2025 15:43

இதே போல தான் ஆதார் கார்டையே வேண்டாம் என்று சொன்னவர்கள் இவர்கள் யூ பி ஐ பணப்பதிவர்த்தனை வந்த பொழுது வேண்டாம் என்று சொன்னவர்கள் இந்த அறிவுக்கொழுந்துகள் தான்


M.Sam
டிச 02, 2025 15:41

பின்ன என்னத்துக்கு நீ கொண்டுவந்த ? கையயம் இல்லை அப்படிதான் ஆதிரை சொன்னீர்கள் இப்போ பாடிய ரூ உஷ்டம்டா உங்களோட


சமீபத்திய செய்தி