உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகை வியாபாரியை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்

நகை வியாபாரியை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தது.மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தரவில்லை என்றால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.சந்தீப் சிங் யாதவ் கேட்ட தொகையை நகைக்கடை வியாபாரியால் தர முடியவில்லை. இதனால் ரூ.20 லட்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார். அந்த ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை சந்தீப் சிங் யாதவ் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஆக 09, 2024 08:36

அங்கங்கே கட்டிங் குடுக்கணும். இல்லேன்னா தாளிச்சிருவாங்க.


shan
ஆக 08, 2024 20:11

அப்படி பிஜேபி செய்கிறது என்றால் சிபிஐ யாருடைய கீழ் உள்ளது திருட்டு பயல்கள் எல்லா அரசு அலுவலகங்களிலும் நிறைந்து கிடக்கிறார்கள் அதற்க்காக திருட்டு அரசியல்வாதிகளுக்கு விசாரணை வரவே கூடாதா


ஆரூர் ரங்
ஆக 08, 2024 20:08

இங்கே போலீஸ் லஞ்சம் வாங்கினா அதிகபட்சமாக ஆயுதப்படை க்கு மாற்றுவார்கள். அவ்வளவுதான். அப்புறம் கட்டிங் கைமாறியதும் இன்னும் பசையான போஸ்டிங்.


venugopal s
ஆக 08, 2024 18:59

இவர்களை வைத்துக் கொண்டு தான் மத்திய பாஜக அரசு நாட்டில் லஞ்சம், ஊழல் எல்லாவற்றையும் ஒழிக்கப் போகிறார்களாம், நம்புங்கள்!


subramanian
ஆக 09, 2024 12:32

நீ ஒத்து ஊதும் திமுக ஊழல் பற்றி உன்னால் பேச முடியுமா? தோலை உரித்து தொங்க விட்டு விடுவார்கள்... போய்யா நீயும் சுரணை இல்லாத ஊதாங்குழல் ....


Narayanan Muthu
ஆக 08, 2024 18:59

அமலாக்க துறை பிஜேபியின் ஏவல்துறை. பிஜேபி மிரட்டி தேர்தல் பத்திரமாக பெறுகிறார்கள். இவர்கள் மிரட்டி லஞ்சமாக வாங்குகிறார்கள். இதுவரை இப்படி வெளிச்சத்துக்கு வராத நிகழ்வுகள் எத்தனையோ.


venugopal s
ஆக 08, 2024 18:57

அமலாக்கத்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கீழ் தானே உள்ளது ? அப்ப சரி!


Kumar
ஆக 08, 2024 18:56

இது தான் பாஜக ஆட்சியின் நிலை


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2024 18:34

தமிழக காவல்துறை துறையில் லஞ்சம் லாவண்யம் கிடையாது. ஆகவே அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்.


Velan Iyengaar
ஆக 08, 2024 17:21

இது தான் இவனுங்க யோக்கியதை


chennai sivakumar
ஆக 08, 2024 17:49

எல்லோரையும் தூக்கில் தொங்க விட வேண்டும். அப்போது கூட திருந்துவார்களா?? கஷ்ட்டம்


karthik
ஆக 08, 2024 18:43

என்னமோ தமிழ் நாட்டில் எவனுமே லஞ்சம் வாங்காமல் வேலை செய்கிற மாதிரி பேசுறீங்க?


subramanian
ஆக 09, 2024 12:28

உனக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு தார்மீக உரிமை இல்லை


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ