உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது

சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ரவுடி கும்பல் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகர் ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரும் இவரது கூட்டாளிகளும் அப்பகுதியினரிடம் பலவந்தமாக நிலங்களை அபகரித்துக்கொண்டும், அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி, சந்தேஷ்காலி பகுதி வாழ் பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை மம்தா அரசும் கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மாநில பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார், போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டத்தை காப்பாற்றும் போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அங்கு அடக்குமுறையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரிதானதால் அரசு நடவடிக்கை எடுத்தது, இதையடுத்து ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்ற திரிணமுல் காங், பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இவர் ரவுடி கும்பல் தலைவனான ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளி என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sampath
பிப் 18, 2024 05:41

This is not reaching kani mozhi akka? Again she falls in to amnesia?


kumar
பிப் 18, 2024 02:17

ஷாஜகான் ஷேக்கை என் கைது செய்யவில்லை ? அமைதி மார்க்க மதத்தை சேர்ந்தவர் என்பதாலா ? மத ஒட்டு பொய் விடும் என்பதாலா ? அரசையும் போலீசையும் மிரட்டி வைத்திருப்பதாலா ? கூட்டாளியை மட்டும் அவர் வேண்டப்பட்ட மாதத்தில் இல்லை என்பதால் கைது கண்துடைப்பு நாடகம் . அது சரி . நம்ம ஊரிலே குண்டு வைத்தவனையே, இன்னும் புடிக்கல . கடந்த வருடங்களில் குண்டு வைத்தவர்களை பயங்கரவாதிகளை சிறையிலிருந்து விடுவிச்சுவிட்டோம் . நல்ல மத சார்பில்லா ஆட்சிகள் . இந்த லட்சணத்தில் தேச ஒற்றுமை பற்றி புள்ளி ராஜா வகுப்பு எடுக்கிறார் .


Svs Yaadum oore
பிப் 17, 2024 22:40

மணிப்பூர் மணிப்பூர் என்று கூவும் விடியல் திராவிடனுங்க மதம் மாற்றிகள் இதற்கு மட்டும் வாய் திறக்க மாட்டார்கள் ...இது பற்றி பட்டியலினத்தவர்கள் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.இதனால் சந்தேஷ்காலி கிராமத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Svs Yaadum oore
பிப் 17, 2024 22:37

மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகர் போலீசார் கைது செய்தனர்....இந்நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் கோரிக்கை .....மணிப்பூர் மணிப்பூர் என்று இங்கு கூவும் மத சார்பின்மை விடியல் திராவிடனுங்க இந்த மேற்கு வங்க அராஜகத்திற்கு மட்டும் வாய் திறக்க மாட்டார்கள் ...


Duruvesan
பிப் 17, 2024 22:25

ஷாஜகான் அமைதி மார்க்கத்து நல்லவன்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை