உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்று மதத்தினரின் எஸ்.சி., சான்றிதழ்... ரத்து செய்யப்படும்! மஹாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு

மாற்று மதத்தினரின் எஸ்.சி., சான்றிதழ்... ரத்து செய்யப்படும்! மஹாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு

மும்பை,: “ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தினரை தவிர பிற மதத்தினர் முறைகேடாக எஸ்.சி., ஜாதி சான்றிதழ் பெற்றிருந்தால் அது ரத்து செய்யப்படும். அரசுப்பணி உட்பட பிற இடஒதுக்கீட்டு சலுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எச்சரித்துள்ளார். கிறிஸ்துவ மதத்தை தழுவிய சிலர் ஹிந்துக்கள் எனக் கூறிக்கொண்டு, பெயரை மாற்றாமல் அரசின் சலுகைகளை பெற்று வருகின்றனர். இதனால், சமூகத்தில் உண்மையாக பின்தங்கிய சிலருக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. இப்படி அரசின் சலுகைக்காக, கிறிஸ்துவர்கள் என்பதை மறைப்பவர்கள், 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' என அழைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், இந்த 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' விவகாரத்தை மஹாராஷ்டிர சட்டசபையில் பாஜ., - எம்.எல்.ஏ., அமித் கோர்கே எழுப்பினார். அப்போது, மத சுதந்திரத்தை, 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதில் அளித்து பேசியதாவது:எஸ்.சி., ஜாதி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என, கடந்த 2024, நவ., 26ல் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தினர் அல்லாதோர் எஸ்.சி., ஜாதி சான்றிதழை முறைகேடாக பெற்றிருந்தால், அவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்படும். சான்றிதழும் ரத்து செய்யப்படும். அரசு வேலை உள்ளிட்ட பலன்களை பெற்றிருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முறைகேடாக பெற்றிருந்த ஜாதி சான்றிதழை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அது செல்லாததாக அறிவிக்கப்படும். ஒருவர் எந்த மதத்தையும் தழுவலாம். அதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதேபோல் முழு சம்மதத்துடன் ஒருவரை மதமாற்றமும் செய்யலாம்.ஆனால், வற்புறுத்தியோ, மோசடி செய்தோ, ஆசை காண்பித்தோ மதமாற்றம் செய்வது குற்றம். இதை சட்டமும் அனுமதிக்காது. வற்புறுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்தால் விசாரணைக்கு உத்தரவிடப்படும்.மேலும் சம்பந்தப்பட்ட அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்க, டி.ஜி.பி., தலைமையில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்லாம்பூர் இனி ஈஸ்வர்பூர்

மஹாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர், ஈஸ்வர்பூர் என்ற பெயரில் இனி அழைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில், சட்டசபையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயர் மாற்றம் குறித்து அமைச்சரவை எடுத்த முடிவு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மஹாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்துள்ளார். ஹிந்துத்வ அமைப்பான ஷிவ் பிரதிஷ்தான், இஸ்லாம்பூர் பெயரை ஈஸ்வர்பூராக மாற்ற வேண்டும் என சங்லி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1986 முதலே இஸ்லாம்பூர் பெயரை மாற்றும் கோரிக்கை நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சிந்தனை
ஜூலை 19, 2025 20:56

கோர்ட்டுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது புரியப் போகிறது... இனி உடனே அலறும்


Rathna
ஜூலை 19, 2025 20:03

சரியான முடிவு. மற்ற மதங்களில் சாதி பிரிவினை என்று அவர்களே சொல்கிறார்கள். அப்படி இருக்கிறதா??


Iyer
ஜூலை 19, 2025 19:16

 மொகலாயர்களும் , ஐரோப்பாவினரும் இந்தியாவிற்கு வந்தது / படையெடுதத்தின் ஒரே நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டுமே.  சேரன், சோழன், பாண்டியன், மௌரியன் காலத்தில் செல்வசெழிப்பால் பலகோடி மதிப்புள்ள கோவில்கள் கட்டப்பட்ட சமயத்தில் = மொகலாயர்களும், ஐரோப்பியர்களும் வறுமையில் வாடினர் - என்பது சரித்திர உண்மை. ஆகையால் பாரதத்தில் உள்ள மொகலாயர் / ஐரோப்பியர் பெயர் உள்ள சாலைகள், நகரங்கள், கட்டிடங்கள், ஜில்லாக்கள் மாற்றி ஹிந்து கடவுள்களின் பெயர் வைப்பது அவசியம்


Minimole P C
ஜூலை 19, 2025 20:36

well said.


Iyer
ஜூலை 19, 2025 19:08

 இந்தியா பிரிவினை “மதத்தின் ஆதாரத்தில்” ஆயிற்று  “முஸ்லிம்கள்” பாகிஸ்தானுக்கும், “ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து மதத்தை சார்ந்த மதத்தினர்” இந்தியாவில் இருப்பார்கள் என்று முடிவாயிற்று  “ஒருபகுதி முஸ்லிம்கள்” நாங்கள் இந்தியாவிலேயே இருப்போம் என்று சொன்னபோது - காந்தி நேரு போன்ற பிரிட்டிஷ் கைக்கூலிகள் - அதற்கு சம்மதம் தெரிவித்தனர்  ஆகையால் பாரதத்தை உடனே ஹிந்து ராஷ்ட்ரா என்று கோஷித்து - ஹிந்துக்களுக்கும் அதை சார்ந்த சீக்கியர், புத்தர், ஜைன மதங்களுக்கு மட்டும் ஓட்டுரிமை அளித்து - மற்ற அந்நிய மதத்தினருக்கு ஓட்டுரிமை யை பறிப்பது அவசியம்.


Iyer
ஜூலை 19, 2025 18:56

 உடனே நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டிய அறிவிப்பாகும் இது.  SC / ST க்களை பணத்தாசை காண்பித்து மதம் மாற்றி விடுகிறார்கள்.  SC / ST ஹிந்துக்களில் மட்டும் தான் உண்டு.  நீ மதம் மாறினால் உன்னை மாற்றிய கயவர்களிடம் இருந்து வேண்டிய சலுகைகள் பெற்றுக்கொள்.  ஹிந்துக்கள் பொறுத்தது போதும். இனி நம் மதத்தை காப்பாற்ற நடவடிக்கை தேவை.  ஈரான் - பண்டைய காலத்தில் பார்சி நாடு"" ஆக இருந்தது. 40000 இஸ்லாமியர்கள் சரண் கேட்டு ஈரானுக்கு வந்தார்கள். வந்தவர்கள் பார்சிகளை வெளியேற்றி விட்டு ஈரானை இஸ்லாமிய நாடாக்கிவிட்டார்கள்  இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் - கயவர்களிடம் கருணை காண்பிப்பது ஆபத்து ஆகும்


VSMani
ஜூலை 19, 2025 14:47

ஒருவர் பிறப்பால் SC என்றால் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராயிருந்தால் என்ன? விருப்பப்பட்ட மதத்தில் சேர்வதற்கோ விருப்பப்பட்ட தெய்வத்தை வணங்குவதற்கோ முழு உரிமையும் உள்ளதுதானே நமது நாடு. creamy லாயர் noncreamy layer ஆண்டு வருமான அடிப்படையிலும் அரசு வேளையில் இருக்கிறார்களா என்ற அடிப்படையில் பார்ப்பது தான் சரி. மதத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.


rama adhavan
ஜூலை 19, 2025 18:18

அப்போ சலுகைகளையும் மொத்தமாக நீக்கி விடுங்கள். முடியுமா?


Minimole P C
ஜூலை 19, 2025 20:39

First understand why a reservation tem brought into operation, then put comment.


எஸ் எஸ்
ஜூலை 19, 2025 13:27

தமிழ் நாட்டில் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சர்வீஸ் முழுவதும் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்து கிரிப்டோ என்று கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகி பிறகு பணியில் சேர்ந்து நல்லபடியாக ஓய்வு பெற்றார். அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. மத்திய பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டார். அங்கு கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்ததால் திருப்பி அனுப்பப்பட்டார். கழக ஆட்சிகள் சிறுபான்மை வாக்கு வங்கிக்காக கண்டு கொள்ளவில்லை


Suppan
ஜூலை 19, 2025 13:01

இந்த நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்கப்பட்டால் ராசா, திருமா போன்றோர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்களா ? பாஸ்டர்களே மதத்தை ஆற்றிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்


Kumar Kumar
ஜூலை 19, 2025 12:34

தமிழக அரசு பணிகளில் குறிப்பிடத்தக்க அளவு இது போன்றவர்கள் தான். மதம் மாறாத SCHEDULED CASTE மக்கள் பாவம்தான். Non crimy layer முறையே கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய கருத்தை எதிர்த்தவர்கள் இந்த மத மாறிய கும்பல்தான். ஆபந்தாவான் திருமால்வளவன் அவர்களும் வாக்கு வாங்கிக்க மத மாறிய கும்பலிடம் ஒரு பேச்சும், மதம் மாறாத SCHEDULED CASTE மக்களிடம் ஒரு பேச்சும் பேசுபவர்.


பிரேம்ஜி
ஜூலை 19, 2025 11:54

நல்ல முடிவு! நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையான முடிவு!


சமீபத்திய செய்தி