உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின்: ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின்: ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழக போலீசார் வழக்கு பதிந்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்தனர். பல மாதங்களாக சிறையில் இருந்த அவருக்கு கடந்த செப்டம்பர் 26ல் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.இந்நிலையில், செந்தில்பாலாஜிக்கு எதிராக புகார் அளித்தவர்கள், ஜாமினை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து இருந்தனர்.இதனை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசியா ஆகியோர் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பு கடந்த 17 ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு தற்போது, சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: மறு சீராய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. செப்., 26 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும், தொடர்புடைய ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த காரணமும் இல்லை. ஜாமினுக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

AMLA ASOKAN
டிச 22, 2024 09:41

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் ஒரு நாளைக்கு இனிக்கிறது , மற்றொரு நாளைக்கு கசக்கிறது . சட்டப்படி தான் வழக்கு விசாரணை செய்யப்பட்டு , சிறையோ , ஜாமீனோ, ஜாமீன் ரத்தோ வழங்கப்படும் . ஊழல் பேர்வழி அஜித் பவார் உத்தமராக துணை அமைச்சர் பதவி வகிக்கிற பொழுது செந்தில் பாலாஜியும் அமைச்சராக பதவி வகிப்பதில் என்னத்த விமர்சனம் செய்ய ?


Barakat Ali
டிச 22, 2024 10:00

"தீர்ப்புக்கள் ஒரு நாளைக்கு இனிக்கிறது, மற்றொரு நாளைக்கு கசக்கிறது" அப்போ வழங்கப்பட்ட தீர்ப்பல்ல.. வாங்கப்பட்ட தீர்ப்பு ன்னு சொன்னவர் தானே ????


Barakat Ali
டிச 22, 2024 09:12

இங்கே பலர் கருதுவது போல உச்சம் கலெக்சன் அமைச்சருக்கு துணைபோய்விட்டதாக நான் கருதவில்லை.. தாங்கள் ஜாமீன் கொடுத்ததில் உச்சம் உறுதியாக உள்ளது. அதே சமயம் பதவியேற்றுக் கொண்டது சாட்சிகளைக் கலைக்க ஏதுவாகும் என்று கருதுவதால் மீண்டும் மீண்டும் எப்படி அமைச்சரானாய் என்று கேட்கிறது... பதில்தான் இல்லை .... காரணம் உச்சத்திடம் எச்சங்களுக்கு அச்சமில்லை ...


Karthik
டிச 22, 2024 07:47

அரசியலில் அயோக்கியர்களை உருவாக்கி நாட்டை சீரழிக்க இந்திய அரசியல் சாசன சட்டத்தின் உதவியோடு முழுமூச்சாக உதவி புரிகிற உச்ச அநீதிமன்றம் வாழ்க.. வாழ்க கொலீஜியம்... வளர்க உங்கள் .... மதிப்பு...


ராமகிருஷ்ணன்
டிச 22, 2024 07:42

அணிலை கூண்டிலே அடைக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
டிச 22, 2024 07:21

அபய் மற்றும் ஜஸ்டின் கூட்டணி கலக்குறாங்க , இவங்களுக்கு பென்ஷன் வேறு கேடு


Kasimani Baskaran
டிச 22, 2024 06:46

கடைசியில் பல்லாயிரம் பேருக்கு வேலை வாங்கித்தந்து சிறப்பாக செயல்பட்ட செபாவுக்கு பாரத ரத்தினா விருது கொடுக்கவேண்டும் என்று சொல்லாமல் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.


J.V. Iyer
டிச 22, 2024 04:46

கலிகாலத்தில் சட்டம் என்ன, ஓட்டுக்கள் என்ன எதையும் அதிகாரத்தால், பணத்தால் வாங்கலாம் என்ற நிலை எல்லா மட்டங்களிலும் வந்துவிட்டதா?


Raj
டிச 21, 2024 23:46

தத்திகள்


Murugesan
டிச 21, 2024 23:35

அரசியல் அயோக்கியர்களை உருவாக்கி நாட்டை சீரழித்து வர உதவி புரிகிற உச்ச நீதித்துறை வாழ்க


Nandakumar Naidu.
டிச 21, 2024 23:29

ஊழலுக்கு துணை போகும் நீதிமன்றங்கள். படு கேவலம். நாடு உருபடுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை