உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடைகளை அவிழ்த்து சோதனை: பள்ளி முதல்வர், உதவியாளர் கைது

ஆடைகளை அவிழ்த்து சோதனை: பள்ளி முதல்வர், உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே, ஜூலை 11-மஹாராஷ்டிரா பள்ளியில் மாணவியர் ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்ட சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் சஹாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கழிப்பறையில், கடந்த 8ம் தேதி ஆங்காங்கே ரத்தத் துளிகள் தென்பட்டன. இதைஅறிந்த பள்ளி முதல்வர், ஐந்து முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியரை பள்ளி கூட்டரங்கத்துக்கு அழைத்தார்.கழிப்பறையில் தென்பட்ட ரத்த துளிகளை, 'வீடியோ' எடுத்து, மாணவியருக்கு போட்டு காட்டிய நிர்வாகம், மாதவிடாய் உள்ளவர்களை சோதனையிட முடிவு செய்தது.இதற்காக, பள்ளி முதல்வர் அறிவுறுத்தலின் படி மாணவியரை கழிப்பறைக்கு அழைத்து சென்ற பெண் உதவியாளர், அங்கு மாணவியரின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனைஇட்டார்.இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமியர், வீட்டுக்கு சென்று தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் பள்ளி முன் குவிந்த மாணவியரின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியைகள், உதவியாளர் உட்பட எட்டு பேர் மீது, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் பள்ளி முதல்வர், பெண் உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sridhar
ஜூலை 11, 2025 08:37

'அங்க' தான் ஆங்கிலம் நல்லா சொல்லிக்கொடுப்பாங்க என்று பெற்றோர்கள் மேலே விழுவதால் வந்த பலன் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 07:50

இதே சம்பவம் எங்க குன்றிய நாட்டுல நடந்திருந்தா ரெண்டு சார்களும் நாலு தம்பிகளும் கூடவே இருந்திருப்பாங்க.


rajan
ஜூலை 11, 2025 07:09

இதுதான் பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ கொள்கை


பேசும் தமிழன்
ஜூலை 11, 2025 07:45

என்ன தலைவா இப்படி சொல்லி விட்டீர்கள்....


Dandanakka
ஜூலை 11, 2025 08:31

இதுல எங்க RSS BJP வந்தது? நல்லா யோசிக்கரிங்க... புத்திசாலி பய புள்ளங்க


RanganathanS
ஜூலை 11, 2025 06:50

பள்ளி ஆசிரியர், முதல்வர், அதிகாரிகளுக்கு ப்ரச்னைகளை அணுகுவது குறித்த வழிகாட்டி இருக்க வேண்டும். தான்தோன்றி தனமாக நடக்க கூடாது.


Viswanathan Sivamani
ஜூலை 11, 2025 09:49

முதல இவங்களுக்கு கவுன்சலிங் பண்ணனும்


Palanisamy Sekar
ஜூலை 11, 2025 04:06

அதிபுத்திசாலி இந்த பள்ளி முதல்வர். இவர் போன்றோர்தான் இந்த நாட்டின் சாபக்கேடு. ஒரு சாதாரண பிரச்சினையை நாடறிய செய்துவிட்டார். சிந்திக்க தெரியாத முட்டா முதல்வர் பள்ளி முதல்வரை சொன்னேனுங்க- வேறு எதற்கும் முடிச்சு போட்டுக்காதீங்க எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல போங்க. போக்ஸ்சா சட்டம் மட்டும் போதாது. அதுக்கும் மேலே போட்டு உள்ளே தள்ளுங்க. வெளியே இருந்தா அவர்களின் அறிவு ஜகஜ்ஜோதியா ஒளிரும். அது நல்லதல்ல


Kasimani Baskaran
ஜூலை 11, 2025 03:52

காட்டுமிராண்டிகளாக இருப்பார்கள் போல..


முக்கிய வீடியோ