சீக்ரெட் சிங்காரம்
சுயேச்சையுடன் மோதும் 'மாஜி!'சிக்கபல்லாப்பூர் கவுரிபிதனுார் எம்.எல்.ஏ., வாக இருக்குறவரு, தேர்தல்ல சுயேச்சையா போட்டியிட்டு ஜெயிச்சாரு. வர்ற லோக்சபா தேர்தல்ல சிக்கபல்லாப்பூர்ல ஜெயிக்குறதுக்கு, கை கட்சிக்காரங்க பிளான் போட்டுட்டு வர்றாங்க. இதனால சுயேச்சை எம்.எல்.ஏ.,வுக்கு, ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இது கை கட்சியில இருக்குற, முன்னாள் எம்.எல்.ஏ., ஒருத்தருக்கு எரிச்சல கிளப்பி இருக்கு. சுயேச்சை எம்.எல்.ஏ., கூட, வார்த்தை மோதல்ல ஈடுபட்டுட்டு வர்றாராம். அதிகாரிகள் இடமாற்றத்துலயும் தலையிடுறாராம். கடுப்பான சுயேச்சை, முன்னாள் எம்.எல்.ஏ., மேல, புகார் மடல் வாசிக்க ஆரம்பிச்சி இருக்காராம்.'சீட்' கேட்டு மிரட்டல்!வெண்ணை மாவட்ட தலைநகர் தொகுதி எம்.பி., தாமரை கட்சிக்காரரு. அவருக்கு 70 வயசு ஆயிடுச்சு. வர்ற தேர்தல்ல அவருக்கு 'சீட்' கிடைக்குறது சந்தேகம்னு சொல்லுறாங்க. இதனால தாமரை கட்சி முன்னாள் அமைச்சரு ஒருத்தரு, 'சீட்' டுக்கு அடிபோடுறாரு. ஆனா அவருக்கு வாய்ப்பு கொடுக்க, எம்.பி., பகிரங்கமா எதிர்ப்பு தெரிவிச்சிட்டு வர்றாரு. ஒன்னு எனக்கு 'சீட்' கொடுங்க. இல்லன்னா என் வாரிசுக்கு வேணும்னு, மாநில தலைவருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சி இருக்காராம். முன்னாள் அமைச்சருக்கு 'சீட்' கொடுத்தா, பிரசாரம் பண்ண மாட்டேன்னு, எச்சரிக்கையும் விட்டு இருக்காரு.எம்.பி.,யின் பயம்!உருளை மாவட்ட தலைநகர் தொகுதி எம்.பி., புல்லுக்கட்டு கட்சிக்காரரு. வர்ற தேர்தல்ல தாமரை கட்சி கூட்டணியில, போட்டியிட ரெடி ஆகிட்டு வர்றாரு. ஆனா அவரு போட்டியிட, கூட்டணியில இருக்குற, தாமரைக்கட்சிகாரங்க எதிர்ப்பு தெரிவிக்குறாங்க. தொட்டகவுடர், குமரண்ணர், ரேவண்ணரு பெயர பயன்படுத்தி ஜெயிச்சிடலாம்னு எம்.பி., நினைச்சிட்டு இருக்குறாரு. ஆனாலும் கூட்டணியில இருக்குற தாமரைகாரங்க கவிழ்த்து விட்டுருவாங்களோன்னு, மனசுக்குள்ள அவருக்கு பயமும் இருக்காம். இதனால தாமரைகாரங்க கூட நட்பு உருவாக்க, முயற்சி பண்ணிட்டு வர்றாரு.