உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேட்பாளர்கள் தேர்வு:முதற்கட்ட ஆலோசனை கூட்டம்: காங்.. மேலிடம் தீவிரம்

வேட்பாளர்கள் தேர்வு:முதற்கட்ட ஆலோசனை கூட்டம்: காங்.. மேலிடம் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்யும் முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தை காங்., கூட்டி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.வரும் 2024 லோக்சபா தேர்தலையொட்டி 10 மாநிலங்களில் 60 வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.இதில் டில்லி, தெலுங்கானா, சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, சிக்கிம், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் 90 வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 20-ம் தேதியன்று ‛‛பாரத ஒற்றுமை நியாய யாத்திரை '' யை காங்., எம்.பி., ராகுல் மும்பையில் நிறைவு செய்கிறார். அதன் பின்னர் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.இதற்கிடையே முன்னள் காங்., மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான கருணாகரனின் மகள் பத்மஜா , பா.ஜ.வில் ஐக்கியமானதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை