உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை

சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை

மும்பை : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பெரும்பாலான கம்பெனிகளின் பங்குகள் சரிவடைந்து வருவதை அடுத்த இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது பங்குச் சந்தைகள் 55 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 55.41 புள்ளிகள் சரிந்து 18446.97 புள்ளிகளாகவும், நிஃப்டி 23.75 புள்ளிகள் சரிந்து 5543.30 புள்ளிகளாகவும் உள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஒரே நாளில் கடுமையான சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி