உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட, பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கு மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை 25) ஒத்திவைக்கப்பட்டது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில்மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் கூறியதாவது: செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?. நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை. பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே?. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு, ‛‛பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுவதை ஏற்க முடியாது'' என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

கண்டிப்பு

இன்று பதில் இல்லையென்றால் நாளை(ஜூலை 25) பதிலோடு வாருங்கள் என அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு மீதான விசாரணை நாளைக்கு (ஜூலை 25) ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

spr
ஜூலை 25, 2024 08:08

நீதிமன்றங்களுக்கு வேறு வேலையே இல்லையா பல வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கையில் நீதிபதி முன்னாலேயே குற்றத்தை ஒப்புக் கொண்ட இந்தக் குற்றவாளியின் மனஉவைத் திரும்பாத திருமப விசாரிப்பதாக நாடகம் நடத்த வேண்டுமா? பேரம் படியவில்லையோ


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2024 01:10

செந்தில் பாலாஜி வெளியேவர வாய்ப்பே இல்லை.


Murugesan
ஜூலை 24, 2024 23:00

நாட்டின் சாபக்கேடு இந்திய அநீதி துறை, தற்போதைய உச்சநீதிமன்றம் அயோக்கிய அரசியல்வாதிங்களின் இரட்சகன்


Babu
ஜூலை 24, 2024 22:47

ஆளும் கட்சி மட்டும் யோக்கியமா என நீதிமன்றம் நினைக்கின்றது.


lana
ஜூலை 24, 2024 22:47

இவர் மீது அமலாக்க துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னது இதே உச்சநீதிமன்றம் தான். இன்று. பாஸ் நாம்... என்ற விவேக் காமெடி நினைவு வந்தா நான் பொறுப்பு அல்ல


venkatapathy
ஜூலை 24, 2024 21:31

பேசீட்டாங்களோ?தம்பி எங்கே?


M Ramachandran
ஜூலை 24, 2024 21:26

கேள்வி என்ன விடுவித்து விட்டு போங்கள். ரவுடிகள், கஞ்சா கடத்ததால் கடத்தல் காரர்கள், குடி காற்றக்கால் உலாவும் இந்த தமிழ் நாட்டில் அவரூம் ஆளும் கட்சிக்கு பண பெட்டகமாகா உலாவிவிட்டு போகட்டுமே.


C.SRIRAM
ஜூலை 24, 2024 21:02

உச்ச நீதிமன்றம் ஏன் செந்தில் பாலாஜியை கேள்வி கேட்க மறுக்கிறது ?. தம்பியை சரணடையாமல் இருக்க செய்வது ஏன் என்று . நடு நிலை தவறி நாட்கள் பலவாகிவிட்டன


Tetra
ஜூலை 24, 2024 20:42

எதற்கு காலத்தை வீண் செய்கிறீர்கள். பொன்முடிக்கு கொடுத்த தீர்ப்பையே கொடுங்கள். அமலாக்கத்துறையை தூக்கி விடுங்கள். நேரம் மிச்சம். மக்களின் எதிர்பார்ப்பும் நீங்கும்


Dharmavaan
ஜூலை 24, 2024 20:15

இந்த கேள்வியை கீழே நீதி மன்றம் ஏன் கேட்கவில்லை .


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ