உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமின் கேட்டும் உச்சநீதிமன்றத்தை செந்தில்பாலாஜி நாடினார்.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகளையும் விசாரிப்பீர்களா? என்பன உள்ளிட்ட சில கேள்விகளை நீதிமன்றம் எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை தெரிவித்த பதில்களை பதிவு செய்தது. மேலும், போக்குவரத்து துறையில் 2,175 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமலாக்கத்துறை அது குறித்த விளக்கங்களையும் அளித்தது. இதனையும் நீதிமன்றம் பதிவு செய்தது.இதன் பிறகு ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sundarsvpr
செப் 02, 2024 17:15

தப்பு செய்து நீண்ட காலம் சுகத்தை அனுபவித்தவர்கள் சிறையின் சுகத்தை அனுபவிப்பது நியாயம் தான். செந்தில் பாலாஜி சிறைக்கு வந்ததால்அலுவலக அமைச்ச பணிக்கு எந்த பாதிப்பு இல்லை. இந்த வழக்கிற்கு நீதிமன்றம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது புரியவில்லை? நீதிமன்றம் வேறு வழக்குகளில் கவனம் செலுத்தினால் குறைந்தது நூறு வழக்குகள் தீர்வுகண்டுஇருக்கும். வழக்குகளை நான்காய் பிரிக்கலாம். கீழ்மட்ட மக்கள் மிகவும் நடுத்தர மக்கள் நடுத்தர மக்கள் உயர் மக்கள் இதனால் நீதி எல்லோருக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் முதல் இரண்டு வகை பிரிவினருக்கு இருக்கவேண்டும்.


sankaranarayanan
ஆக 20, 2024 21:12

நீதி மன்றங்களின் தலையிட்டால் சிறைச்சாலை விடிச்சோடி கிடக்கிறதாம் சிறையில் இருந்த அனைவரும் நீதி மன்ற தலையீட்டினால் ஜாமீன் பெற்று சந்தாரோஷமாக் வெளி வந்ததால் வழக்குகளே இல்லையாம்


Ramesh Sargam
ஆக 20, 2024 19:46

அங்கே டெல்லியில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலை ஆக.27 வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. இங்கு..? ஏன் அரசியல்வாதிகள் வழக்குகள் நமது நீதிமன்றங்களில் இப்படி மெதுவாக நடைபோடுகிறது?


N.Purushothaman
ஆக 20, 2024 19:00

சிறை அமைச்சருக்கு ஜாமீன் கொடுக்காமல் இழுத்தடிப்பது சமூக நீதிக்கு எதிரானது ....


Duruvesan
ஆக 20, 2024 18:14

ஆனாலும் விடியலு போட்ட கேஸ் ரொம்ப ஸ்டராங் பா


vee srikanth
ஆக 20, 2024 18:12

தம்பியை ஸ்காட்லாந்து காவல் தேடுதோ >??


Ms Mahadevan Mahadevan
ஆக 20, 2024 16:54

என்று தான் வழக்கு விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தருவார்கள்? ஏற்கனவே ஒரு வருசம் கடந்தாசி.


அஸ்வின்
ஆக 20, 2024 16:42

ராசா. ராஜாமாதிரி சுத்தீட்டு இருக்க ராண் எல்லாம் நேரம்


rsudarsan lic
ஆக 20, 2024 16:26

பொத்தி வைத்தது என்பதே சரி


Ramanujadasan
ஆக 20, 2024 16:21

செ பா உள்ளேயே இருந்தால் தமிழக மக்கள் இந்த அரசினால் அனுபவித்து வரும் கொடுமைகள் கொஞ்சம் குறையும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி