உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,க்கு ஏழு கட்ட தேர்தல்: வாரணாசிக்கு கடைசி கட்டம்

உ.பி.,க்கு ஏழு கட்ட தேர்தல்: வாரணாசிக்கு கடைசி கட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ,பி.,க்கு ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில் வாரணாசி தொகுதிக்கான தேர்தல் கடைசி கட்டத்தில் நடைபெற உள்ளது.நாடு முழுவதுக்குமான பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதற்கட்ட தேர்தல் ஏப்.,19ம் தேதி நடைபெறும். கடைசி கட்டமாக 7 ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ம் தேதி நடைபெறும்.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட தேர்தலாக ஏப்.,19 ல் நடைபெறும்.உ.பி., பீகார் மற்றும் மே.வங்க மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி., மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ., நேரடியாக 52 தொதிகளுக்கும் மேலாக போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. மாநிலத்தில் சுமார் 15.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 8.17 கோடி பேர் ஆண்கள். 7.17 கோடி பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 6,638 பேர். மாநிலம் முழுவதும் 92,587 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்ட தேர்தல் (ஏப்.,19) 8 தொகுதிகள்2-ம் கட்ட தேர்தல் (ஏப்.,26) 8 தொகுதிகள்3-ம் கட்ட தேர்தல் (மே.,07) 10 தொகுதிகள்4-ம் கட்ட தேர்தல் (மே.,13) 13 தொகுதிகள்5-ம் கட்ட தேர்தல் (மே.,20) 13 தொகுதிகள்6-ம் கட்ட தேர்தல் (மே.,25) 14 தொகுதிகள்7-ம் கட்ட தேர்தல் (ஜூன்.,01) 13 தொகுதிகள் மாநிலத்தில் பிரதமர் போட்டியிடும் தொகுதியான வாரணாசி தொகுதி கடைசி கட்டமான 7-வது கட்ட தேர்தலின் போது தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் மாநில முதல்வர் யோகியின் சட்டசபைதொகுதி அடங்கிய கோரக்பூர் தொகுதியும் கடைசி கட்ட தேர்தலில் தேதியில் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rameshkumar natarajan
மார் 18, 2024 10:10

If we schedule like thgis only, he can do electionering through the country. So, make it convenient for him, this schedule is made. Long Live democrasy.


venugopal s
மார் 18, 2024 04:15

மற்ற எல்லா தொகுதிகளிலும் பரப்புரையை முடித்து விட்டு தமது சொந்த தொகுதியில் பரப்புரை செய்ய மோடி அவர்களுக்கு தகுந்த அவகாசம் கொடுக்கும் வகையில் தேர்தல் தேதிகளை முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் அக்கறையை பாராட்ட வேண்டும்!


Anbuselvan
மார் 17, 2024 23:20

முதலில் ராமேஸ்வரத்திற்கு (ராமநாதபுரம் தொகுதி) பிறகு காசி (வாரணாசி தொகுதி) போக வேண்டும் என்பது ஐதீகம் .


Oviya Vijay
மார் 17, 2024 22:46

Mr.28 (Modi) பண்றதுல ஏதோ உள்குத்து இருக்குறது போல இருக்கு... மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டிருக்காது... மத்திய அரசுடனான ஆலோசனையின் பேரிலேயே தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும்... ஒருவேளை மத்திய அரசு தயார் செய்து கொடுத்த கால அட்டவணையை தேர்தல் கமிஷனர் அறிவித்தாரோ என்னவோ... யாருக்குத் தெரியும்... தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னே தான் ஓர் தேர்தல் கமிஷனர் காரணம் சொல்லாமல் பதவி விலகியதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்... ஏதோ நடந்திருகின்றது... வெளி உலகத்திற்கு தெரியவில்லை... தேர்தல் கமிஷனர்களை நியமிப்பதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை இணைத்துக் கொள்ள மத்திய அரசு விரும்பாததும் நம் சந்தேகம் வலுவடைய காரணமாக உள்ளது... இதுவரை மத்திய அரசு செய்த அயோக்கியத்தனங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இச்சூழலில் வாக்காளர்கள் தான் சிந்திக்க வேண்டும்... தமிழகத்தில் பிஜேபி வாஷ் அவுட் என்பது மட்டும் நன்கு தெரியும்...


PRAKASH.P
மார் 17, 2024 22:46

Kaduvlin kattam who knows


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை