உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...: உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கியாளராக சக்தி காந்த தாஸ் மீண்டும் தேர்வு

‛வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...: உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கியாளராக சக்தி காந்த தாஸ் மீண்டும் தேர்வு

புதுடில்லி: உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கான ரேட்டிங்கில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ‛ ஏ பிளஸ் 'ரேங்கிங் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 1987 ல் துவங்கப்பட்ட ‛குளாபல் பைனான்ஸ் ' என்ற இதழ், 1994 ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படும் ரிசர்வ் வங்கி கவர்னர்களை அங்கீகரித்து வருகிறது. உலகின் 100 முக்கிய நாடுகளின் ரிசர்வ் வங்கி கவர்னர்கள், ஐரோப்பிய யூனியன், கிழக்கு கரீபியன் ரிசர்வ் வங்கி, மத்திய ஆப்ரிக்க ரிசர்வ் வங்கி, மேற்கு ஆப்ரிக்க மாநிலங்களின் ரிசர்வ் வங்கி மற்றும் ஆசிய வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை கணித்து வருகிறது.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், ரூபாய் நோட்டு ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி விகித நிர்வாகம் ஆகியவற்றை சிறப்பாக கையாண்ட ரிசர்வ் வங்கி கவர்னர்களை கிரேடிங் முறையில் ‛ ஏ பிளஸ் ' முதல் ‛ எப் ' வரை தரவரிசைபடுத்துகிறது. ‛ ஏ' என்றால் சிறப்பாக செயல்படுதல் ‛ எப்' என்றால் தங்களது செயல்பாடுகளில் தோல்வியுற்ற வங்கித் தலைவர்களின் பெயர் இடம்பெற்று இருக்கும். 2023ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்று இருந்தார்.2024ம் ஆண்டிற்கான தர வரிசைப்பட்டியலை குளோபல் பைனான்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது. இதில், இந்த ஆண்டும் சக்திகாந்த தாஸ் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்று உள்ளார். டென்மார்க் ரிசர்வ் வங்கி கவர்னர் கிறிஸ்டியான் கெட்டல் தாம்சன் மற்றும் சுவிஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் தாமஸ் ஜோர்டான் ஆகியோரும் ‛ ஏ பிளஸ் ' ரேங்கிங் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Mani . V
ஆக 24, 2024 04:34

மினிமம் பாலன்ஸ் இல்லையின்னு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திடம் பல ஆயிரம் கோடியை கொள்ளையடித்து ஸாரி வசூல் செய்து சாதனை புரிந்தவர்தானே இவரு?


RAMESH DHANAPAL
ஆக 21, 2024 21:57

காங்கிராஜூலேஷன்ஸ்


தமிழன்
ஆக 21, 2024 21:09

அரசு எலியிட்ட 100 ருபாய் நாணயத்தை ரூபாய் பத்தாயிரத்திற்கு விற்ற தமிழக முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து முதல்வரை பதவி இறக்க செய்யுமா இந்த ரிசர்வ் வங்கி ..அரசு கருவூல பணத்தை அதிக விலைக்கு விற்கும் இந்த கட்சியை தடை செய்ய வேண்டாமா.. ? அரசின் சொத்துக்களை கட்சி நிதிக்கு அதிக பணத்திற்கு விற்பதற்கு அனுமதிப்பதா?


Arunachalam Kavikkumar
ஆக 21, 2024 19:24

சிறப்பு


Mohandurai
ஆக 21, 2024 17:37

Congratulations sir


SUBBU,MADURAI
ஆக 21, 2024 19:15

பெயரை சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்பது போல் சக்திகாந்ததாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!


Mohandurai
ஆக 21, 2024 17:35

திரு சக்திகாந்த தாஸ் அவர்கள் பெரிய பொருளாதார நிபுணர் இல்லை என்ற கருத்து அவருடைய நியமனத்தின் போது வைக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ,திரு சிதம்பரம் அவர்களின் ," காய்கறி விற்பவர் மின்னணு முறையில் வர்த்தகம் செய்வாரா ,இந்த திட்டம் தோல்வியில் முடியும் " என்ற கருத்தை பொய்யாக்கி ,சிறந்த ரிசர்வ்வங்கி கவர்னர் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 17:11

IAS அதிகாரி ரிசர்வ் வங்கி கவர்னரா என்று எள்ளி நகையாடிய கூட்டம் இப்போ கதறல். IAS அல்லாத மன்மோகன் நிதித்துறை செயலாளராக்கப்பட்டபோது அதே ஆட்கள் மவுனம் சாதித்தனர். டாக்டரல்லாதவர்கள் பலர் சுகாதாரத்துறை அமைச்சர்களாக சிறப்பாக பணியாற்றியுள்ளனரே.


தமிழன்
ஆக 21, 2024 21:11

அரசு கருவூல பணத்தை அதிக விலைக்கு விற்கும் தமிழக முதல்வர் பதவியை பறிக்க வேண்டாமா..? இன்று வரை வழக்கு கூட பதியவில்லை.. அரசின் சொத்துக்களை கட்சி நிதிக்கு அதிக பணத்திற்கு விற்பதற்கு அனுமதிப்பதா? அரசு வெளியிட்ட முன்னாள் தமிழ் நாடு முதல் அமைச்சர் கருணாநிதி உருவம் பொரித்த 100 ருபாய் நாணயத்தை ரூபாய் பத்தாயிரத்திற்கு விற்க முயன்ற தமிழக முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து முதல்வரை பதவி இறக்க செய்யுமா இந்த ரிசர்வ் வங்கி ..


spr
ஆக 21, 2024 16:44

தொடக்கத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரத்தால் வளர்க்கப்பட்டவர் திரு சக்திகாந்த தாஸ் ஆனால் அவரைச் சுதந்திரமாக செயல்பட விடாமல் தன சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டாரென்றொரு குற்றச்சாட்டும் ப.சி மேல் உண்டு பணமதிப்பிழப்பு இவரது கருத்துருவாக்கம் என்றும் அது இந்த நாட்டை படு பாதாளத்தில் தள்ளியது என்றும் ப.சி குற்றம் சாட்டினார். திரு ரகுராம் ராஜனுக்கு இவர் தக்க மாற்றல்ல என்றும் சொல்லியதுண்டு ஆனால் பொறுமையாக எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் செயலாற்றி வெற்றி கண்டவர் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிக்கு வலதுகை போன்றவர் என்றாலும், இவர் போன்றோரை அடையாளம் கண்டு தக்கபடி பயன்படுத்துவதில் மோடி கில்லாடி


venugopal s
ஆக 21, 2024 16:07

இவர் உழைத்த உழைப்பு வீணாக வில்லை, யாருக்கு உழைத்த உழைப்பு? யாருக்கோ!


Hari
ஆக 21, 2024 16:22

He worked for country.. Not for tasmac like you venugopal


namby1944@yahoo.in 572PAN746
ஆக 21, 2024 15:38

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தபோது ரகுராம் ராஜன் அதை கிண்டல் அடித்தார் யாருக்காக பேக்கிங் என்று கேட்டார்.சக்திகாந்ததாஸ் நியமிக்கப்பட்ட போது பொருளாதார மேதை சிதம்பரம் ரகுராம் ராஜன் போன்ற திறமையானவர்கள் ஐ பாஜகவிற்கு பிடிக்காது என்றார்.இருவர் முகத்திலும் கரி பூசப்பட்டுள்ளது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ