உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டு மக்களுக்கு அவமானம்: ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

நாட்டு மக்களுக்கு அவமானம்: ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:''ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம்,'' என்று பிரதமர் மோடி பேசினார். இன்று பார்லியின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அவரது பேச்சு போர் அடிக்கும் வகையில் இருந்ததாகவும், மோசமான விஷயம் என்றும், பிரியங்கா, சோனியா ஆகியோர் கூறினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3raw517p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சர்ச்சைகளுக்கு பதில் கூறாத ஜனாதிபதி மாளிகை கூட, காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது.பா.ஜ., தலைவர்கள் பலரும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டில்லியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், ஜனாதிபதி உரை பற்றி கூறுகையில், பழங்குடியின பெண் ஒருவர் போர் அடிக்கும் உரையை வழங்குவதாக கூறியுள்ளார். அதே குடும்பத்தை சேர்ந்த இன்னொருவர், ஜனாதிபதியின் உரை, மோசமான விஷயம் என்று கூறியுள்ளார். இது, நாட்டில் இருக்கும் 10 கோடி பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்ட அவமானம்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

pmsamy
பிப் 01, 2025 12:38

மோடிக்கு அடி கொடுத்த சோனியா வாழ்க


அப்பாவி
பிப் 01, 2025 09:07

இனிமே ஆகஸ்ட் 15 வரை ஓய்வுதானே.


Parthasarathy
பிப் 01, 2025 01:38

சோனியா மற்றும் அவரது கட்சியினர் இப்படி சொல்வதே அவமானம் என்பது உங்களுக்கு அவசரத்தில் புரியவில்லயா?


subramanian
ஜன 31, 2025 22:10

உலக பாரத மக்கள் அனைவர் சார்பில் சோனியா குடும்பத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.


Kannan
ஜன 31, 2025 21:24

ஒவ்வொரு குடிமகனுக்கும் அவமானம் என்றும் அடுத்த வரியிலேயே சொல்லியிருக்கிறார். அவமானப்படுத்தும் அவசரத்தில் முழுசாக படிக்க நேரமில்லையோ?


நிக்கோல்தாம்சன்
ஜன 31, 2025 20:32

வெளிநாட்டுக்காரி சோனியா என்று திட்டினால் பொறுத்துக்கொள்வார்களா


ராமகிருஷ்ணன்
ஜன 31, 2025 18:57

களவாணி காங்கிரஸ் கைபாவைகள், அல்லக்கைகள் ஜனாதிபதியாக இருந்து சோனியா எழுதி கொடுப்பதை படித்தால் தேனாக அவர்களின் காதுகளில் விழும்


SRIRAM
ஜன 31, 2025 18:57

நம் நாட்டின் மீதுள்ள பற்று என்பது சோனியா குடும்பத்திற்கு வராது....ஏன் என்றால் சோனியா குடும்பம் இத்தாலி நாட்டுகாரர்


அப்பாவி
ஜன 31, 2025 18:48

அவர் கண்ணுக்கு சோர்வாக காணபட்டதாக தெரிஞ்சிது. இதுக்குதான் பக்கம் பக்கமா உரைன்னு எழுதி படிக்கச் சொல்லக்கூடாது. அவருக்கும் 66 வயது ஆகுது. டயர்ட் ஆகாம இருக்க அவர் என்ன சிறுவயதா? இதைப் போய் ஊதி பெருசு படுத்திக்கிட்டு.


spr
ஜன 31, 2025 18:47

"அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி" என்று அவர் தன்னை நினைத்துக் கொண்டதால் வந்த வினை அவருக்கு இது குடியாட்சி என்பது இன்னமும் தெரியவில்லை ஆனால் இது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு அவமானம் என்று சொல்லியிருந்தால் சிறப்பு. ஆனால் பழங்குடி மக்களுக்கு அவமானம் என்று சொல்லுவது அரசியல் இதைத்தானே தமிழகத்தில் ஆளுநர் உரையை சுட்டிக் காட்டி அரசியல் செய்யப்படுகிறது ஆளுநர் பழங்குடியாக இருந்திருந்தால் இங்கும் அப்படிச் சொல்லியிருக்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை