உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் மோதுவதற்கு காத்திருக்கிறேன்: ராஜிவ் சந்திரசேகருக்கு சசி தரூர் வாழ்த்து!

மீண்டும் மோதுவதற்கு காத்திருக்கிறேன்: ராஜிவ் சந்திரசேகருக்கு சசி தரூர் வாழ்த்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரள பா.ஜ., தலைவராக தேர்வான ராஜிவ் சந்திரசேகருக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வாழ்த்து தெரிவித்தார்.முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கேரளாவை பூர்விமாக கொண்டவர். கர்நாடகாவில் இருந்து மூன்று முறை ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். மோடியின் முந்தைய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அவர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்டார். இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்த முறை சசி தரூரை ராஜிவ் சந்திரசேகர் தோற்கடித்து விடுவார் என்று கட்சியினர் உறுதியாக நம்பினர். கடைசியில், சசி தரூர் வெற்றி பெற்று விட்டார்.தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் ராஜிவ் சந்திரசேகருக்கு பதவி எதுவும் தரப்படவில்லை. அவருக்கு கேரளா மாநில பா.ஜ., தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தலைமை எடுத்த முடிவின்படி அவர் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இன்று அதற்கான அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், ராஜிவ் சந்திரசேகருக்கு அவர் எதிர்பாராத வகையில், சசி தரூரிடம் இருந்து வாழ்த்து வந்துள்ளது.எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சசி தரூர், 'பா.ஜ.,வின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும். மீண்டும் உங்களுடன் போர்க்களத்தில் மோதுவதற்காக காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ranga Ramanathan
மார் 24, 2025 23:05

இது போன்ற ஆரோக்யமான அரசியல் தொடரட்டும் .


Anbuselvan
மார் 24, 2025 21:41

2014 தேர்தலில் கிட்டத்தட்ட 1,05,000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி ஐ சார்ந்த திரு ராஜகோபால் அவர்களை தோற்கடித்தார். 2019 இல் கிட்டத்தட்ட 1,00,000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி ஐ இருந்த திரு கும்மாளம் ராஜசேகரனை தோற்கடித்தார். 2024 இல் வெறும் 16,100 வோட்டு வித்தியாசத்தில் திரு சந்திரசேகரனை தோற்கடித்தார். கடந்த 3 தேர்தலின் போக்கை கவனித்தல் 2029 இல் இவர் 20,000 வோட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைவார் போல இருக்குதே.


RAJ
மார் 24, 2025 20:55

சசி தரூர் எப்போவோ ஜெயிலுக்கு போக வேண்டிய ஆளு.. இருக்கட்டும்...


சமீபத்திய செய்தி