உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி விநியோகம்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

பல நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி விநியோகம்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க உதவிய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்., எம்.பி.,யான சசி தரூர் பிரதமர் மோடியை அடிக்கடி பாராட்டி வருகிறார். அமெரிக்காவின் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியதை, காங்., மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர் சமீபத்தில் பாராட்டி பேசினார். தொடர்ந்து பாராட்டி பேசி வருவது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8b91ji3z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க உதவிய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: உலகின் தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா கோவிட் 19 காலத்தில் திகழ்ந்தது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது.கோவிட் 19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்த போது வளரும் நாடுகளுக்கு இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விநியோகம் செய்தது. சமமான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்தியா பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜதந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது.நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி விநியோகம் வெளிப்படுத்தியது. பணக்கார நாடுகள், தங்கள் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்கள் வளங்களை செலவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவை ஏழை நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik
மார் 31, 2025 19:19

உள்ளதை உள்ளபடி யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்தவகையில் இவர் சொல்வது சரியே..


M. PALANIAPPAN, KERALA
மார் 31, 2025 16:16

உண்மையை சொல்கிறார் சசி தரூர் கோவிட் கால கட்டத்தில் உலகம் முழுவதும் தடுப்புஊசி மனித நேயத்துடன் விநியோகம் செய்தது இந்தியா உலகம் கண்ட உண்மை , இதை யாராலும் மறுக்க முடியாது, நமக்கு கிடைத்த பிரதமர் ஒரு மாணிக்கம், அவர் நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்


ஆரூர் ரங்
மார் 31, 2025 12:23

இனி கேரளாவில காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை. எதிர்கட்சி எம்பி யாக இருப்பதில் துளியும் பயனில்லை. ராகுல் உளறல்களுக்கும் முட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம். என்ன செய்யலாம்?.


SUBBU,MADURAI
மார் 31, 2025 07:44

சசிதரூர் விரைவில் பாஜகவில் ஐக்கியமாக போகிறார் அதற்கு கட்டியம்தான் பிரதமர் மோடியை பற்றி இவரது சமீபத்திய பாராட்டுக்கள்.


வாய்மையே வெல்லும்
மார் 31, 2025 07:35

பச்சை கிளி கூண்டை விட்டு பறக்க நினைக்கும் கதை எவ்வளவு பேருக்கு தோன்றியது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை