உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா இன்ஹேலர்; அமெரிக்க பல்கலை ஆய்வில் அதிர்ச்சி

5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா இன்ஹேலர்; அமெரிக்க பல்கலை ஆய்வில் அதிர்ச்சி

புதுடில்லி : ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோயாளிகள் மருந்தை சுவாச பாதைக்குள், உள்ளிழுக்க பயன்படுத்தும், 'இன்ஹேலர்' கருவிகளில் உள்ள ஒருவகை வாயுக்களால் ஏற்படும் காற்று மாசு, ஆண்டுக்கு 5.30 லட்சம் பெட்ரோல் கார்களால் ஏற்படும் காற்று மாசுக்கு இணையானது என, அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள் இன்ஹேலர் கருவிகள் மூலம் தங்களுக்கான மருந்தை பயன்படுத்துகின்றனர். இதில் 'மீட்டர்டுடோஸ் இன்ஹேலர்' உலர் பவுடர் உடைய இன்ஹேலர், 'சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர்' போன்ற வகைகள் உள்ளன. இவை குறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை சார்பில், நுரையீரல் நிபுணர் டாக்டர் வில்லியம் பெல்ட்மேன் தலைமையில் ஆய்வு நடந்தது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

அதன் விபரம்:

மீட்டர்டு-டோஸ் இன்ஹேலர்களில் மருந்தை எளிதாக நுரையீரலுக்குள் செலுத்த, 'ஹைட்ரோபுளோரோஅல்கேன்' வாயு பயன்படுத்தப்படுகிறது. இது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்கள் வெளியிட்ட மாசுவில், 98 சதவீதமும் இவ்வகை இன்ஹேலர்களால் ஏற்பட்டுள்ளன. இது 2.50 கோடி மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வுக்கு இணையானது. மேலும், இது, ஓராண்டில் அமெரிக்காவில் 5.30 லட்சம் பெட்ரோல் கார்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடுக்கு சமம். பிற வகை இன்ஹேலர்களில் இத்தகைய வாயுக்கள் இல்லை. நோயாளிகளே வேகமாக உறிஞ்சி மருந்தை உள்ளிழுக்க வேண்டும். அதனால் அவை சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே டாக்டர்கள், சூழலுக்கு உகந்த இன்ஹேலர்களை பரிந்துரைக்க வேண்டும். அது அனைவருக்கும் பாதுகாப்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Senthoora
அக் 08, 2025 11:14

இஸ்ரேல் ஊடும் குண்டுகளின் புகை நிலஅதிர்ச்சி பற்றற்றும் சொல்லுங்க அமெரிக்கா.


Swaminathan L
அக் 08, 2025 11:07

இதற்கு அமெரிக்காவில் எப்டிஏ அப்ரூவல் ஏற்கனவே கொடுக்கப் பட்டிருந்தால் அது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? மேற்குலகில் தடைப்படுத்தப்பட்ட எவ்வளவோ மருந்துகள் நம் நாட்டில் பல காலமாக விற்பனையாகின்றனவா இல்லையா என்கிற புரிதல் பொது மக்களுக்கு இல்லை. ஐஎம்ஏ போன்ற அமைப்புகள் ஏதாவது சொன்னால் தான் தெரியும்.


lana
அக் 08, 2025 10:57

இது தான் alopathy. இவர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து பயன்படுத்த கூறுவார்கள். 10 அல்லது 20 வருடம் கழித்து இதனால் வேறு ஒரு பிரச்சனை என்பார்கள். கேட்டால் இதெல்லாம் அறிவியல் பூர்வமான மருந்து மருத்துவ முறை. ஆனால் அந்த அந்த நாட்டின் பகுதிகளில் உள்ள பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை கேலி கிண்டல் செய்வது அந்த மருந்து மருத்துவ சிகிச்சைக்கு எதிராக கூறுவது case போடுவது. நீதிமன்றம் பாரம்பரிய முறைகள் குறித்து குறை கூறுவது சரியல்ல. சமீபத்தில் உதாரணம் cancer குறித்து கிரிக்கெட் வீரர் சித்து தன் மனைவி மஞ்சள் மிளகு கொண்டு குணம் ஆனதாக கூறியது.


K.Ravi Chandran, Pudukkottai
அக் 08, 2025 07:53

ஆமா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? நம்புனாத்தான் அமெரிக்காவுல சோறு கிடைக்கும்னு டிரம்ப் சொல்லிட்டார் அதான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 08, 2025 10:06

நம்பவில்லை என்றால் வரி 25 சதவீதம் உயர்த்தி விடுவார் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று கூவுவார்.


krishna
அக் 08, 2025 04:56

And blaming India and China for Air pollution. USA is a villain for all problems in this world directly or indirectly. How Mr. Trump will react to these findings.Media should ask the questions to his cabinet.


Arul Narayanan
அக் 08, 2025 12:49

அவருக்கு காற்று மாசுபாடு வெப்பமயமாதல் இதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. பொய் பிரசாரம் என்று சொல்கிறார்.


Senthoora
அக் 08, 2025 04:44

பல தசாப்தங்களாக பாவிக்கப்பட்டது, இப்போதான் தெரியுதா, அமெரிக்கா புதுசா எதாவது விலை கூடியதில் கண்டுபிடித்திருப்பாங்க, இப்போ மார்கட்டிங் செய்ய இப்படி பிளான் போடுறாங்க,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை