உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசர சட்டத்தால் பி.டி.ஏ.,வை மூடுங்கள்! அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் குட்டு

அவசர சட்டத்தால் பி.டி.ஏ.,வை மூடுங்கள்! அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் குட்டு

பெங்களூரு: அவசர சட்டத்தைக் கொண்டு வந்து, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தை மூடும்படி, மாநில அரசை, கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டித்தது.பெங்களூரின் எம்.வி.லே - அவுட்டில் முத்தேகவுடா என்பவருக்குச் சொந்தமான 18 சென்ட் நிலம் உள்ளது. இதை 2003ல் அந்த அறிவிப்பும் இல்லாமல், பி.டி.ஏ., கையகப்படுத்திக் கொண்டது. நிவாரணமும் வழங்கவில்லை. இதுகுறித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முத்தேகவுடா மனு தாக்கல் செய்தார்.இம்மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் குமார், நீதிபதி சிவசங்கரேகவுடா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பி.டி.ஏ., தலைவர் ஜெயராமை வன்மையாக கண்டித்தனர்.

நில அளவு வேறுபாடு

தலைமை நீதிபதி தினேஷ் குமார் கூறியதாவது:கடந்த 2003ல் எந்த அறிவிப்பும் வெளியிடாமல், மனுதாரரின் நிலத்தை அபகரித்துள்ளனர். 18 சென்ட் நிலத்தை இழந்ததாக, நில உரிமையாளர் கூறுகிறார். ஆனால் 15 சென்ட் நிலத்தை கையகப்படுத்தியதாக, பி.டி.ஏ., கூறுகிறது.நிலத்தை கையகப்படுத்தினீர்கள் என்றால், அதற்கான நிவாரண தொகையை வழங்கியிருக்க வேண்டும். 21 ஆண்டுகளுக்கு பின், 2024ல் நிலத்தை தெளிவாக அடையாளம் காண்பதாக பி.டி.ஏ., விரும்புகிறது. இப்படி நடந்தால் ஒரு குடிமகனின் நிலை என்ன? நீங்கள் (பி.டி.ஏ., தலைவர் ஜெயராம்) நில உரிமையாளராக இருந்தால், என்ன செய்வீர்கள்?

சோதனை

கால் நுாற்றாண்டாக நபரை, பி.டி.ஏ., அலைய வைத்துள்ளது. இதுவரை ஏன் நிவாரணம் வழங்கவில்லை? பி.டி.ஏ., அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, மாறுவேடத்தில் சென்று சோதனை நடத்துங்கள். அப்போதுதான் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும்.காலை 11:00 அல்லது மதியம் 3:00 மணிக்கு, பி.டி.ஏ., கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றால். உங்களின் வேலையை செய்து கொடுப்பதாக கூறும், நுாற்றுக்கணக்கான ஏஜென்டுகள் கிடைப்பர். முதலில் அவர்களை விரட்டுங்கள்.பி.டி.ஏ.,வில் நடக்கும் முறைகேடுகளை பற்றி, மாநில சட்டசேவைகள் ஆணையத்துக்கு புகார்கள் வருகின்றன. பி.டி.ஏ., கமிஷனர் நல்ல முறையில் பணியாற்றுங்கள்.நீங்கள் என்ன பின்னணியில் இருந்து வந்தீர்கள் என்பது, எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நாங்கள் விவசாய பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

அதிகாரிகளுக்கு வேலை

நீங்கள் சாதாரண பிரச்னைகளை எப்படி தீர்ப்பீர்கள்? நபர் ஒருவர் தன் நிலத்துக்கு, ஒரு பைசா நிவாரணம் கிடைக்காமல், 21 ஆண்டுகளாக அவதிப்படுவது, எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. நாங்கள், உங்களிடம் தவறை கண்டுபிடிக்கவில்லை. உங்கள் அதிகாரிகளை அழைத்து, வேலை வாங்குங்கள்.பி.டி.ஏ.,வின் லே அவுட்களால், நிலத்தை இழந்தவர்கள் அவதிப்படுகின்றனர். இத்தகைய பி.டி.ஏ.,வை வைத்திருப்பதை விட, அவசர சட்டம் மூலம், மூடுவதே சிறந்தது,இவ்வாறு அவர் கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி