உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி நிர்வகிப்பில் சித்தராமையா அரசு தோல்வி முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம்

நிதி நிர்வகிப்பில் சித்தராமையா அரசு தோல்வி முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம்

பெங்களூரு: “வாக்குறுதித் திட்டங்களுக்கு நிதி திரட்டாமல் இருந்தால், மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலை சீர்குலையும். நிதி நிர்வகிப்பில் சித்தராமையா அரசு தோல்வி அடைந்துவிட்டது,” என, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையாக விமர்சனம் செய்தார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, பசவராஜ் பொம்மை பேசியதாவது:தன் தோல்வியை மூடிமறைக்க, முதல்வர் சித்தராமையா, மத்திய அரசை விமர்சிக்கிறார். மாநில அரசு கம்பி மீது நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. வாக்குறுதித் திட்டங்களுக்கு, கூடுதல் வருவாய் சம்பாதிக்கும் பணியை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொருளாதாரம் மோசமாகும்.மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வாக்குறுதித் திட்டங்கள் பெயரில், நலத் திட்டங்களுக்கு பணம் செலவிடப்படுகிறது. வேலை வாய்ப்பு இல்லாமல், வளர்ச்சி சாத்தியமில்லை.சித்தராமையா முதன் முறை முதல்வராக இருந்ததற்கும், இப்போது முதல்வராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 1994ல் இவர் நிதித்துறை அமைச்சராக இருந்தார்.அப்போது பட்ஜெட் தொகை குறைவாக இருந்தது. அவர் திட்டங்களின் அளவை குறைத்து, பட்ஜெட் தாக்கல் செய்து பொருளாதார ஒழுங்கை கொண்டு வந்தார்.இரண்டாவது முறை முதல்வராக இருந்தபோது, வருவாயை அதிகரித்த பின், வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், தொந்தரவு ஏற்பட்டிருக்காது. இம்முறை பட்ஜெட்டில் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் அல்லாத செலவுகள் 103 சதவீதமாக உள்ளது. வளர்ச்சிக்கு நிதி எங்குள்ளது? கடன் வாங்கி, கடனை அடைக்க அதிகமான தொகை செலவாகிறது.நிதி நிர்வகிப்பில், மாநில அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. சமூக நியாயத்தை கொடுக்க இந்த அரசால் முடியவில்லை. ஏழாவது ஊதிய ஆயோக் செயல்பாட்டுக்கு வந்தால், 20,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இதற்கு நிதி ஒதுக்கவில்லை. இதே போன்று, வாக்குறுதித் திட்டங்களுக்கு பணத்தை ஒதுக்கினால், மாநில வளர்ச்சிக்கு பணம் எங்கிருந்து வரும்?வருவாய் இல்லாமல், வளர்ச்சி அடைய முடியுமா? கடந்த ஆண்டு 1.75 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிப்பதாக, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். 1.61 லட்சம் கோடி ரூபாய் வசூலானது. 14,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பணிகள் நடக்காவிட்டால், மாநிலம் பத்து ஆண்டுகள் பின் தங்கிவிடும்.இவ்வாறு அவர்பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை