உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித் ஷாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கமா?: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

அமித் ஷாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கமா?: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு:''துணை ஜனாதிபதி தேர்தல் என்பது அரசியல் விவகாரம். அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது ஏன்?,'' என, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பியுள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பில் பா.ஜ.,வின் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து 'இண்டி' கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நக்சல் ஆதரவாளர் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்தார். இதற்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் துவங்கினர். நல்லதல்ல இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று வழக்கறிஞர்கள் கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் கடிதம் எழுதியிருக்கின்றனர். இது நல்லதல்ல. துணை ஜனாதிபதி தேர்தல் என்பது அரசியல் விவகாரம். இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி அவர்கள் தலையிடுவதால், நீதிபதி யாக பணியில் இருந்தபோது ஏதோ ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவாக அவர்கள் இருந்தனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவதும், கடிதம் எழுதுவதும் சரியானது அல்ல. ராகுலாக இருந்தாலும் சரி; மஹுவா மொய்த்ராவாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் அநாகரிக மான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். பிரதமரையும், காலஞ்சென்ற அவரது தாயாரையும் அவதுாறாக பேசுவது, தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நியாயமல்ல மக்கள் ஓட்டளிக்காத நிலையில், தேர்தல் கமிஷனை குறைகூறுவது எந்தவிதத்திலும் நியாயமல்ல. வரிசையாக மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்து விட்டதால், ராகுலின் கோபம் தற்போது எல்லைமீறி சென்றுவிட்டது. அவருக்கு நம் நாட்டை ஆள, மக்கள் மீண்டும் வாய்ப்பு தர மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Venugopal S
ஆக 31, 2025 13:26

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள் அரசியல் செய்யும்போது இதே போல இவர் கண்டனம் தெரிவித்து இருந்தால் பாராட்டலாம்!


Vijayasekar
ஆக 31, 2025 08:25

மனோதத்துவ மருத்துவர் உங்கள் ஊரில் இருந்தால் போயி பார்க்கவும்


Iyer
ஆக 31, 2025 07:30

* யஸ்வந்த் வர்மா வீட்டில் சிக்கிய CURRENCY NOTES சுமார் 500 கோடிக்கு குறையாது என்ற நம்பத்தகுந்த செய்தி வந்துள்ளது. * அமித் ஷாவுக்கு எதிராக கையெழு இட்ட நீதிபதிகள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா? * இந்த மொத தொகையும் ஒரே ஒரு நீதிபதி அடித்த கொள்ளையா? * இதில் நிச்சயமாக பல நீதிபதிகள் ஈடுபட்டுள்ளார்களா ? * CURRENCY சிக்கியவுடன் - இந்த விஷயம் 15 நாள் வரை வெளியே வராமல் தடுத்தது யார்? * CURRENCY சிக்கியவுடன் - இந்த விஷயம் 15 நாள் வரை வெளியே வராமல் தடுத்தது ஏன்? பல நீதிபதிகள் இந்த ஊழலில் பங்கு உண்டு என்பது தெளிவு. * அந்த சமயத்தில் செயல்படாத நீங்கள் இப்போ கொக்கரித்து ஏன் ?


pmsamy
ஆக 31, 2025 07:28

எதுக்கு கையெழுத்து


D Natarajan
ஆக 31, 2025 06:28

அமித் ஷா சொன்னதில் தப்பில்லை. பாதி நீதிபதிகள் மோசமான , அரசாங்கத்திற்கு எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள். கேடுகெட்டவர்கள். முதலில் collegium முறை ஒழிக்கப் படவேண்டும். நீதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகள் ஒழிக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் சமம் என்று இருக்க வேண்டும்.


சிட்டுக்குருவி
ஆக 31, 2025 05:33

ராகுல் அவர் நடத்தையில் இருந்தே அவர் நாட்டின் தலைமை பதவிக்கு தகுதியற்றவர் என்பது நிரூபணமாகிவிட்டது. தன்னை நாட்டின் சட்டங்களுக்கெல்லலாம் அப்பாற்பட்டவராக அவர் கருதுகிறார் .குற்றம் என்று தெரிந்தே அயல்நாட்டில் அரசு அனுமதியின்றி Backops என்ற கம்பெனி ஆரம்பித்து தவறான ஒரு அயல்நாட்டினருடன் கூட்டு சேர்ந்து ,பின் பிரிந்து சென்ற அவர் நாட்டின் தளவாடம் வாங்கியதில் சட்டத்திற்கு புறம்பாக கமிஷன் பெற்றவர் என்று அறியும்போது, இவருடைய நம்பகத்தன்மையை பற்றிய சந்தேகம் எழுகின்றது. இந்த செய்திகள் வெளியில் வந்தபோதும் தன்னுடைய உண்மையான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் எந்த ஒரு விளக்கத்தையும் மக்களுக்கு அவர் அளிக்கவில்லை .அவருடைய மனபோக்கு நான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்னை எந்த சட்டமும் கட்டுப்படுத்தாது என்பதைபோலதான் உள்ளது. அதற்க்கேற்றார் போல் அரசு சார்ந்த துறைகளும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது ஒரு தனிநபர் இதைப்போல செய்திருந்தால் இதேபோலத்தான் விட்டுவிடுவார்களா என்றால் சட்டங்கள் இயற்றுவதன் நோக்கம்தான் என்ன வென்று மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது .


Kasimani Baskaran
ஆக 31, 2025 05:25

சத்தமில்லாமல் கையெழுத்து போட்ட நீதிபதிகளின் சொத்துக்களை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும். சந்துரு போன்ற பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.


Iyer
ஆக 31, 2025 04:26

இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபடுகின்ற நீதிபதிகளின் பின்னணியை ஆராய்ந்தால் - அவர்கள் ஊழலும் பொய்யும் நிறைந்த காங்கிரஸ் ஆதர்வாளர்களாக இருப்பர்.


A viswanathan
ஆக 31, 2025 03:23

ஓய்வு பெற்ற நீதிபதிகள் அனைவரும் பல்லை பிடுங்கிய பாம்பு மாதிரி தான்.இவர்களுக்கு எல்லாம் ஒரே குறிக்கோள் பப்புவை பிரதமர் ஆக்கி அதில் குளிர்காய வேண்டும்.


Priyan Vadanad
ஆக 31, 2025 02:08

அமிட்ஷா வெறுப்பு பேச்சை கக்கலாம். உண்மையை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல திரித்து பேசலாம். ஆனால் அவர் பேசுவது சரியில்லை என்று கூட்டாக சொல்வது சரியில்லை. அப்படித்தானே இதுதான் பாவக்க லாஜிக்.


vivek
ஆக 31, 2025 05:48

ஆமாம் பிரியன் வடை


Priyan Vadanad
ஆக 31, 2025 07:41

வடையுடன் வடநாடு டீயையும் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி நிற்குமாம்.


புதிய வீடியோ