உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமார பூங்கா மேற்கில் வெள்ளி தேரோட்டம்

குமார பூங்கா மேற்கில் வெள்ளி தேரோட்டம்

பெங்களூரு : பெங்களூரு குமார பூங்கா மேற்கில், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யேஸ்வரா சுவாமி கோவிலின் 54வது வெள்ளி தேரோட்ட திருவிழா நாளை துவங்குகிறது.பெங்களூரு குமார பூங்கா மேற்கில், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யேஸ்வரா சுவாமி கோவில், 1962 ஏப்ரல் 19ம் தேதி கட்டப்பட்டது.இந்த கோவிலில், 53 ஆண்டுகளாக வெள்ளி தேரோட்ட திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 54ம் ஆண்டு வெள்ளி தேரோட்ட திருவிழா, நாளை துவங்குகிறது. 16ம் தேதி நிறைவு பெறுகிறது.தினமும் காலையிலும், மாலையிலும் மஹாபிஷேகம், சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்களும் நடக்கின்றன. 14ம் தேதி மாலையில் கல்யாண உற்சவம் நடக்கிறது.வரும் 15ம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு, சுப அபிஷித் முகூர்த்தத்தில் வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4:00 மணிக்கு, சுவாமிக்கு உலர்ந்த பழங்களின் மஹாபிஷேகம், வேதபாராயணம், புஷ்ப அலங்காரம், அர்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மறுநாள் 16ம் தேதி மாலையில் சயன உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை