எஸ்.ஐ.ஆர்., ஒன்றும் புதிதல்ல!
வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் பலமுறை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் கோரிக்கையை ஏற்று, எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தியது. ஆனால் அவர்களே எதிர்க்கின்றனர். பிரஹலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,
மோசமான நிலை!
பா.ஜ.,வின் ஓட்டு திருட்டு நடவடிக்கை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணியால் பூத் அலுவலர்கள் பலர் தற்கொலை செய்துள்ளனர். இப்பணியை வலுக்கட்டாயமாக திணித்திருப்பது, எவ்வித திட்டமிடலும் இன்றி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு, கொரோனா கால ஊரடங்கு உத்தரவு போல் உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே தலைவர், காங்கிரஸ்சுயபரிசோதனை செய்யுங்கள்!
பீஹார் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் ஆன நிலையில், எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி, தங்கள் தோல்வி குறித்து இதுவரை சுயபரிசோதனை செய்யவில்லை. மாறாக ஓட்டு திருட்டு புகார், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி