வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெட்டப்பட்ட கை சின்ன காங்கிரஸ் கட்சியில் வேலை பார்ப்பவர்களுக்கு மரியாதை கிடையவே கிடையாது . பெங்களூர் சிவகுமார் நல்ல உதாரணம் . கட்சிக்கு வேலைபார்த்தவர் இவர் ஆனால் பதவி சுகம் எவரோ ??????????
உடுப்பி: துணை முதல்வர் சிவகுமார், தன் மனைவியுடன் கொல்லுார் மூகாம்பிகையை தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.துணை முதல்வர் சிவகுமார், பரபரப்பான பணிகளுக்கிடையே, கொல்லுாருக்கு வந்து மூகாம்பிகையை தரிசனம் செய்தார். நேற்று காலை பெங்களூரில் இருந்து சிவகுமார், தன் மனைவி உஷாவுடன், சிறப்பு விமானத்தில் பைந்துார் வந்திறங்கினார். இங்கிருந்து சாலை வழியாக கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தார்.சிவகுமாருக்கும், அவரது மனைவிக்கும் கோவில் நிர்வாகம் சம்பிரதாயப்படி பூர்ண கும்ப வரவேற்பு அளித்தது. அதன்பின் மூகாம்பிகையை தரிசனம் செய்த தம்பதி, தலைமை அர்ச்சகர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின் சிவகுமார் அளித்த பேட்டி:கொல்லுார் மூகாம்பிகையின் ஆசியால், மாநிலம் சுபிட்சமாக உள்ளது. ஐந்து வாக்குறுதி திட்டங்களும், மக்களை சென்றடைந்தன. மக்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என, மூகாம்பிகையிடம் பிரார்த்தனை செய்தேன். உணர்வு அரசியல்
வக்பு வாரியம் விஷயமாக, பா.ஜ.,வினர் தேவையற்ற குழப்பங்களை உருவாக்குகின்றனர். மக்களின் உணர்வுகளை வைத்து, அரசியல் செய்கிறது. எந்த விவசாயிகளுக்கும், அநியாயம் நடக்காது. அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே என்பது, மகான்களின் வாக்கு. அதன்படி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற, எங்களால் முடிந்த அளவில் முயற்சித்துள்ளோம். மூன்று இடங்களிலும், கடவுள் எங்களுக்கு நல்லது செய்வார் என, நம்புகிறோம். எனக்கு கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை.கர்நாடகா, ஹரியானா சட்டசபை தேர்தலை பற்றி, கருத்து கணிப்புகள் என்ன கூறின. ஆய்வுகளை முன் வைத்து, அரசியல் செய்ய முடியாது. மக்களின் அன்பை பெற்றவர் யாரோ, அவர்களின் மனதில் இடம் பிடித்தது யாரோ அவர்களுக்கு, மக்களின் ஆதரவு கிடைக்கும்.எந்த காரணத்தை கொண்டும், தகுதியான பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு அநியாயம் நடக்க விடமாட்டோம். தகுதியான குடும்பங்களின் கார்டுகள் ரத்தாகியிருந்தால், பட்டியல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டடது. கார்டுகள் கோரி மீண்டும் விண்ணப்பம் அளிக்க, அனுமதி அளிக்கப்படும். பயப்படாதீர்கள்
அரசின் பிரதிநிதியாக, கட்சி தலைவனாக நான் வாக்களிக்கிறேன். ஒரு ஏழைக்கு கூட தொந்தரவு ஏற்படாது. யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக, பேசுகின்றனர்.மாநிலத்தில் நக்சல் என்கவுன்டர் நடந்துள்ளது. மற்ற நக்சல்களையும் சரண் அடையும்படி உத்தரவிடுவது குறித்து, போலீஸ் துறையும், உள்துறையும் பார்த்து கொள்வர். நான், என் துறை தொடர்பான பணிகளை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
வெட்டப்பட்ட கை சின்ன காங்கிரஸ் கட்சியில் வேலை பார்ப்பவர்களுக்கு மரியாதை கிடையவே கிடையாது . பெங்களூர் சிவகுமார் நல்ல உதாரணம் . கட்சிக்கு வேலைபார்த்தவர் இவர் ஆனால் பதவி சுகம் எவரோ ??????????