உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சல் மாநிலத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு

ஹிமாச்சல் மாநிலத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இன்னும் சில மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் எனக்கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், குல்லு மாவட்டத்தில் உள்ள குருத்வாரா அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த மரங்கள் சாய்ந்து அங்கு இருந்தவர்கள் மீதும் கடைகள் மீதும் விழுந்தது. இச்சம்பவத்தில் பெண்கள் 3 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ