உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் பெண் நக்சல் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

ஆந்திராவில் பெண் நக்சல் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கச்சூட்டில் நக்சல் அமைப்பின் தலைவன் சலபதியின் மனைவி அருணா உட்பட நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுதுறைக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w8ed5u7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சல் அமைப்பின் தலைவன் சலபதியின் மனைவி அருணா உட்பட நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் மற்றும் மூன்று AK-47 துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நக்சல் அமைப்பு தலைவன் சலபதி யார்?

நக்சல் அமைப்பு தலைவன் சலபதி, கடந்த ஜனவரியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான். இவனது மனைவி அருணாவும் நக்சல் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவர், இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நக்சல் அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !