உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜப்பான், பிரிட்டனில் மந்தநிலை இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு

ஜப்பான், பிரிட்டனில் மந்தநிலை இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பு

புதுடில்லி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரும் பொருளாதாரமாக உள்ள இந்தியாவுக்கு பெரும் வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும் பின்னடைவு

தற்போது, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2023 நான்காவது காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 0.3 சதவீதமானது. இதையடுத்து பொருளாதார மந்தநிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டுஉள்ளது. இந்தாண்டு இறுதியில் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிய நாடான ஜப்பானும், பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றன.தற்போது உலகின் பெரும் பொருளாதாரத்தில், ஜெர்மனிக்கு அடுத்ததாக நான்காவது இடத்துக்கு ஜப்பான் தள்ளப்பட்டுள்ளது.ஜெர்மனியும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ரஷ்யா -- உக்ரைன் போரால், எரிபொருள் விலை உயர்வால், ஜெர்மனியின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது, போதுமான தொழிலாளர் இல்லாதது போன்றவை ஜெர்மனிக்கு பெரிய பாதிப்பாக உள்ளது.இந்நிலையில், இந்தி யாவின் மீது உலகின் பார்வை திரும்பியுள்ளது. தற்போது, 6.2 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், உலகின் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடாக இந்தியா தொடர்கிறது.

இந்தியா முந்தும்

தற்போதுள்ள நிலையில், பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில், 2026ல் ஜப்பானையும், 2027ல் ஜெர்மனியையும் இந்தியா முந்தும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, உலக நாடுகள் பலவும், முதலீடு களுக்காக இந்தியாவை குறிவைத்துள்ளன. இதன் வாயிலாக பல புதிய வாய்ப்புகள் இந்தியாவுக்கு கிடைக்க உள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

g.s,rajan
பிப் 18, 2024 09:37

இந்தியாவிலும் மந்த நிலைதான், சொல்லிக்கும்படியா ஒண்ணும் பெருசா இல்லை .....


Duruvesan
பிப் 18, 2024 07:23

பாஸ் MF எல்லாம் 2023 மார்ச் அப்புறம் AV 28% GAIN குடுத்து இருக்கு. எல்லாமே மோடினால அடிச்சி விட வேணாம். 2012, 2013ல வாங்கின சில FUNDS 10 டைம்ஸ் அதிகம் ஆகி இருக்கு.


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 09:43

சந்தை வளர்ச்சிக்கும் மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளே காரணம் ...... குறைந்த பட்ச பொருளாதார அறிவுள்ள யாரும் ஒப்புக்கொள்ளும் உண்மை இது ........


Kasimani Baskaran
பிப் 18, 2024 06:52

ஜப்பானியர்களைப்போல அயராது உழைத்தால் இந்தியாவை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது. நீதித்துறையிலும், நிதித் துறையிலும் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.


kijan
பிப் 18, 2024 01:44

இந்தியர்கள் மற்றும் தென்அமெரிக்கா ...மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மக்கள் வாங்கிய கடனை திரும்ப கட்டமாட்டார்கள் என்ற எண்ணம் கிரெடிட் கார்ட் கம்பெனிகளிடையே இருக்கிறது .... பொருளாதார வகையில் உயர நேர்மை அவசியம் .... பிரதமர் சொன்னதைப்போல .... லஞ்சம் ...ஊழல் இல்லாத சமுதாயம் ...ஜப்பானைப்போல வரவேண்டும் ....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ