உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியாகும் பதிவுக்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்: அஸ்வினி வைஷ்ணவ்

வெளியாகும் பதிவுக்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்: அஸ்வினி வைஷ்ணவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பயனர்கள் வெளியிடும் பதிவுகளுக்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்'' என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.சிங்கப்பூரில் நடந்த ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: சமூக ஊடக தளங்கள் தாங்கள் செயல்படும் நாட்டின் சமூக கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, அந்நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சமூக ஊடக நிறுவனங்களுக்கும், சமூகத்திற்கும் இடையிலான நம்பிக்கை குறைந்து வருவதால், அனைவரும் கவலைப்படுகிறார்கள். போலியான, தகவல்கள், பெருகும் வதந்திகள் காரணமாக நம்பிக்கை முற்றிலும் உடைந்து வருகிறது. போலி மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் பதிவுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகின்றன. எனவே பயனர்கள் வெளியிடும் பதிவுகளுக்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். தொழில்நுட்பம் மிக விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இதுபோன்ற சூழ்நிலைகளில், அனைத்து விவகாரங்களுக்கும் ஏற்ற ஒரு சட்டத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது. எனவே மக்களுக்கு வழிகாட்டுதலை உருவாக்கும்போது அதை சமூக ஊடக தளங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி