உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக வலைதளமான ‛ கூவுக்கு ஊதியாச்சு சங்‛கூ!

சமூக வலைதளமான ‛ கூவுக்கு ஊதியாச்சு சங்‛கூ!

புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதளமான ‛கூ 'வுக்கு நிதி நெருக்கடி காரணமாக மூடுவிழா நடத்தப்படுகிறது.கடந்த 2019, இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவக்கப்பட்ட ‛ கூ ' தளம் சமூக வலைதளமாக செயல்பட்டது. இதனை அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் துவக்கினர். தினமும் 21 லட்சம் பேர் பயன்படுத்தினர். மாதம் 1 கோடி பயனர்கள் இருந்தனர். 9 ஆயிரம் பிரபலங்கள் இதில் இருந்தனர். இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கியது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த தளத்தை பயன்படுத்த முடியும்.நிதி நெருக்கடி காரணமாக, இங்கு பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது.நிதி நெருக்கடி, தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல பிரச்னைகள் காரணமாக இந்த நிறுவனம் ஸ்தம்பித்தது. தற்போது நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டது. இதனை அதன் நிறுவனர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி