உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்பு

கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்பு

புதுடில்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் ஆஜராக வக்கீல் ரோஹின்டன் நாரிமன் என்பவரை தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நியமனம் செய்தது. இதனால் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் அதிருப்தியடைந்ததார்.இந்நிலையில் கோபால் சுப்ரமணியம் தனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்வதாக சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி்க்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதனை அமைச்சர் ஏற்க மறுத்து விட்டார். பின்னர் ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினார். தனது ராஜினாமா குறித்து பேசி தம்மை இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று கோபால் சுப்ரமணியம் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ