உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்: லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி

அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர்: லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா பதவிக்காலத்தில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கண்டனம் தெரிவித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.லோக்சபா சபாநாயகராக பதவியேற்ற பிறகு ஓம்பிர்லா பேசியதாவது: இந்த அவையின் சபாநாயகராக மீண்டும் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் நன்றி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p64o8pox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த 18 வது லோக்சபா உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக உள்ளது.பல்வேறு சவால்களை தாண்டி 64 கோடி பேர் ஓட்டுப் போட்டு உள்ளனர். இந்த அவை சார்பாக அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். நெடுந்தொலைவில் உள்ள ஒவ்வொரு ஓட்டை பெறவும், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி தலைமையில், தேஜ கூட்டணி அரசு தொடர்ந்து 3வது முறையாக அமைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில், மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை மற்றும் விருப்பங்கள் அதிகரித்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளை நிறைவே்ற நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அவசர நிலை பிரகடனத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர் பேசுகையில், ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக அவசர நிலை உள்ளது. அப்போது சட்டவிரோத கைதுகள் நடந்தன. நாட்டையே சிறையாக மாற்றியது அவசர நிலை, நம் நாட்டில் அநியாயம் நிகழ்ந்த காலம் அது. இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நாட்டில் தற்போது அவசரப்படாத அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி கட்சிகள் கோஷம் போட்டன. இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

J.Isaac
ஜூன் 27, 2024 07:55

கையாலாகாத கூட்டம் தான் பழைய கதையை பேசி மக்களை குழப்பி கொண்டிருப்பார்கள். இதற்கு ஆதரவாக ஏசி அறையில் உட்கார்ந்து கருத்து எழுதுகிற ஒரு வெட்டி கூட்டம்.


M Ramachandran
ஜூன் 26, 2024 20:13

உள்ளதைய்ய உன்னால் நொல்லத்துக்கு நோப்பாளம்


M S RAGHUNATHAN
ஜூன் 26, 2024 19:17

எமர்ஜென்ஸி காலத்தில் முலாயம் சிங், லாலு பிரசாத்,.நிதிஷ்குமார் ஆகியோர் சிறையில் அனுபவித்த கொடுமைகள் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தெரியுமா? தெரிந்தும் ராகுலையும், காங்கிரசையும் ஆதரிப்பது கேவலமாக தெரியவில்லையா,? மிசா கொடுமையை ? அனுபவித்தவன் என்று கூறிக் கொள்ளும் ஸ்டாலின் மிசாவை கொண்டு வந்த காங்கிரஸை ஆதரிப்பது அவமானம். மிசாவில் கஷ்டப் பட்ட திமுகவினருக்கு செய்யும் துரோகம். துரோகம் செய்வதில் தேர்ந்தவர்கள் திமுகவினர்.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 19:08

என்னப்பா அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்தால் பாராட்ட வேண்டும்..... ஆனால் இந்தி கூட்டணி ஆட்களுக்கு ஏன் கோபம் வருகிறது ....ஓ சரி சரி .....அந்த இழி செயலை செய்து....அரசியல் சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது ..,...கான் கிராஸ் கட்சி தானே ?????


Easwar Kamal
ஜூன் 26, 2024 18:19

இப்போ எதுக்கு பழைய கதை நடக்கின்ற கதை பத்தி பேசுங்க. அப்போ EMERGENCY 2 வருஷம் தன இப்போ 10 வருஸம் அதையேதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க.


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 18:28

இது போல அரசை எதிர்த்து 1975 77 இல் எழுதியிருந்தால் இந்நேரம் மிசாவில் கைது செய்து காணாமல் கூட அளித்திருப்பதாக. அதுதான் வித்தியாசம்.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 18:56

அப்படி பார்த்தால்.... யார் எல்லாம் உள்ளே போய் இருக்க வேண்டும்... மோடி அவர்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் தான்.... நாட்டின் பிரதமர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுகிறேன் பேர்வழி என்று கூத்தடிக்க முடிந்தது.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 26, 2024 18:58

இதை அவசர நிலையை கொண்டுவந்துவிட்டு, 130 முறை அரசியல் சட்டத்தை அந்நிய நாட்டு மதத்தினருக்கு ஆதரவாக திருத்திவிட்டு, ஒரிஜினல் சட்டத்தில் இல்லாத செக்குலர் என்ற வார்த்தையை திணித்துவிட்டு தற்போது அரசியல் அமைப்பு பாதுகாவலர் போல் நடனமாடும் கான் போலி காந்தி காங்கிரஸ்டம் சொல்லவும். வரலாறு முக்கியம். கொள்ளை அடிக்க வந்த பாலைவன கொடுங்கோலர்களை, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை படுகொலை செய்த முஸ்லிம்களையும், ஐரோப்பிய கிருத்தவர்களையும் ஹிந்துஸ்தானை காக்க வந்தவர்கள் போல் காட்டுகிறார்கள். நாலந்தா போன்ற பல்கலைக்கழகங்களை எரித்து விட்டு, குருகுலங்களை அழித்துவிட்டு கிருத்துவன் வந்து தான் நமக்கு கல்வி கற்று கொடுத்தான் என்று நம்புவது பழைய கதையை மறந்ததால்தான்


emergency
ஜூன் 26, 2024 20:36

1967 லந்து இப்போ வரை எமர்ஜென்ஸி டமில் நாட்டில்


Kasimani Baskaran
ஜூன் 26, 2024 17:51

திருமணமாகாதவர்களைக்கூட உபியில் கட்டாய கருத்தடை செய்தார்கள். கேள்வி கேட்டால் சிறை. கூட்டம் போட்டால் சிறை. பேரணியோ அல்லது ஊரணியோ எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாது. வாயைத்திறந்தால் சிறை என்ற அளவில் இருந்தது. முதல்வரைக்கூட சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அவர்தான் சொல்லுகிறார்.


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 16:33

எதிர்கட்சிகள்... கான் கிராஸ் கட்சி கொண்டு வந்த அவசர நிலை ஆதரிக்கும் ஆட்களா... அதனால் தான் அதை பற்றி பேசினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 26, 2024 16:31

. நாட்டிற்க்கு உபயோகமானது பற்றி பேச மாட்டார்கள் ஜெய் ஹிந்த்


S. Narayanan
ஜூன் 26, 2024 15:49

எமர்ஜென்சி காலத்தை யாராலும் மறக்க முடியாது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 26, 2024 15:31

எமெர்ஜென்சியை ஆதரிப்பவர்கள் எமெர்ஜென்சி காலத்தில் டெல்லியில் நடைபெற்ற கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சையை ஆதரிப்பவர்கள் ஆவார்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி