உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபாநாயகர் தேர்தல்: ஆதரவு அளிக்க ராகுல் நிபந்தனை

சபாநாயகர் தேர்தல்: ஆதரவு அளிக்க ராகுல் நிபந்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், ஆளுங்கட்சி நிறுத்தும் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தரத் தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஆதரவு தர வேண்டும் என கார்கேவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டார். ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு தரப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம். இது குறித்து மீண்டும் தொடர்பு கொள்வதாக கார்கேவிடம் ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால், இதுவரை அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் மோடி ஒத்துழைப்பு கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறார். இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பேசும் தமிழன்
ஜூன் 25, 2024 18:50

நீங்கள் ஆட்சியில் இருந்த போது... அப்படி எதிர்கட்சிகளுக்கு கொடுத்தீர்களா. ????


JOY
ஜூன் 25, 2024 14:35

அது தளத்தை ஜாதி யாரந்த ஜாதி


M Ramachandran
ஜூன் 25, 2024 12:24

உங்கள் ஆதரவு யாருக்கு வேனும். நிபந்தனையுடன் ஆதரவாம். அன்று ஜனாதிபதி தேர்தலில் தாழ்த்தப்பட்ட பெண்மணிய ஆதரிக்காமால் முன்னேரிய ஜாதியஐய் சேர்ந்த அதுவும் வேண்டாதா கட்சியிலிருந்து வந்த மனிதரை ஆதரித்த போதே சாயம் வெழுதுடிச்சிங்கோ. அது மட்டுமா முஸ்லீம் மத்திய ஈர்ந்த ரசித்தாள் கலப்பில்லாத நாட்டின் முனேற்றத்தில் முக்கிய பங்காற்றிய அப்துல் கலாம் ஐயாவை தேர்ந்தெடுக்கா காழ்புணர்ச்சியால் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். அதற்க்கு உங்களுக்கு ஜால்ரா அடித்த கலாம் என்றால் திருடன் என்று புது டிக்க்ஷனரி வார்த்தையாய் கண்டுபிடித்த காகித ஓடம் கடலில் தூக்கி போட்டாலும் வந்து தொல்லாய் கொடுப்பேன் மிரட்டிய ஒரு மஞ்சத்துண்டு யேஅம்மாற்று பேர்வழி என்றா நாமாகரணம் கொண்ட உதவி கொண்டு மிரட்டல் விடுத்தீங்க.


Barakat Ali
ஜூன் 25, 2024 12:23

நாடாளுமன்ற வளாகத்தில், அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை ஏந்தியவாறு 'அரசமைப்புச் சட்டம் வாழ்க', 'அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்', 'ஜனநாயகத்தை காப்போம்' உள்ளிட்ட முழக்கங்களை சோனியா காந்தி தலைமையில் எதிா்க்கட்சி தலைவா்கள் எழுப்பியது வேடிக்கையாக இருக்கிறது. அரசியல் சட்டமோ, ஜனநாயகமோ எந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. 'பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனா். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று செய்தியாளா்களிடம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அப்படி என்ன தாக்குதல் நடந்துவிட்டது என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும். காரண காரியம் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பதன்மூலம் தன்னையும், தனது கட்சியையும் நிலைநிறுத்திக்கொள்ள அவா் விரும்பினால் அந்த அணுகுமுறை தவறானது, கண்டனத்துக்குரியது.


பேசும் தமிழன்
ஜூன் 25, 2024 18:53

ஒருவேளை அவரது பாட்டி மூலம் அரசியல் சட்டதுக்கு முன்பு ஆபத்து வந்ததே ....அந்த நினைப்பில் கூறி இருப்பார்கள் போல் தெரிகிறது.


தத்வமசி
ஜூன் 25, 2024 12:14

இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆதரவு தராமல் இருந்து தான் பாரேன். என்ன நடக்கிறது என்று ?


Balasubramanian
ஜூன் 25, 2024 12:06

நிபந்தனையை ஏற்கலாம்! கூச்சல் குழப்பம் வெளி நடப்பு செய்யாமல் குறிப்பிட்ட நபர் மட்டும் சபையின் நடப்பு மசோதா மீது மட்டும் அமைதியாக தங்கள் கருத்துக்களை வைக்க முன் வந்தால்! அனைத்து வாக்கெடுப்பிலும் அமைதியாக வெளி நடப்பு செய்யாமல் பங்கு கொண்டு வாக்களிக்க முன் வர வேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 12:01

அவரையும் கட்டிப்பிடித்து கண்ணடிக்க முயல்வீர்களா?


kumarkv
ஜூன் 25, 2024 11:57

இந்த ஆளை பார்லிமெண்ட் டுக் குள்ள அனுப்பியதே மக்களது தவறு.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 25, 2024 12:33

உங்க மோடிஜி முதல் மூன்று ரவுண்டுல பின்னடைவு அடைஞ்ச மாதிரியா... இவர் பின்னடைவு அடைஞ்சாரு?


M Ramachandran
ஜூன் 25, 2024 12:56

என்ன செய்வது ஜன நாயகம் பணநாயகம் இரண்டும் இருக்கெ.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை