உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 9, 10, 12ம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு

9, 10, 12ம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு

திமர்பூர்:கோடை விடுமுறை காலகட்டத்தில் டில்லி அரசுப் பள்ளிகளில் 9, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுமென, மாநில கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.மாநில கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கைசகோடையை முன்னிட்டு வரும் 11ம் தேதி முதல் ஜூன் 30 வரை வழக்கமான அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. 9, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி முதல் மே 31 வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.சிறப்பு வகுப்புகள் காலை நேரங்களில் நடத்தப்படும். மூன்று ஒரு மணி நேர காலங்களாகப் பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு காலை 7:30 முதல் காலை 10:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.இரட்டை ஷிப்டுகளில் இயங்கும் பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும் இடமளிக்கும் வகையில் தனி பிரிவுகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணிதம் தினமும் கற்பிக்கப்படும். தேவையை கருத்தில் கொண்டு மூன்றாவது பாடம் சேர்க்கப்படலாம்.சிறப்பு வகுப்புகளுக்கு சீருடை கட்டாயம். மாணவர் வருகை ஆன்லைனில் பதிவு செய்யப்படும். பெற்றோர் ஒப்புதலுடன் மாணவர் வருகையை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நுாலகமும் திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்கமான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்றால், விருந்தினர் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை ஈடுபடுத்தப்படலாம். கோடை விடுமுறையின்போது ஆசிரியர், ஊழியர்களின் விடுப்பு பொதுவாக அனுமதிக்கப்படாது. எனினும் அனுமதியுடன் விடுமுறை அனுமதிக்கலாம்.சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட மற்றும் மண்டல கல்வி அதிகாரிகள் தினமும் குறைந்தது இரண்டு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை