மேலும் செய்திகள்
பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்
2 hour(s) ago | 3
பீஹாரிலும் கட்டப்படுகிறது ஏழுமலையான் கோவில்
3 hour(s) ago | 1
கம்பன் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி
4 hour(s) ago
புதுடில்லி: லோக்சபாவில் இன்று (டிசம்பர் 08) வந்தே மாதரம் பாடல் 150வது ஆணடு நிறைவு குறித்து 10 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து இன்று (டிசம்பர் 8) லோக்சபாவில் 10 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.லோக்பாவில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். சிறப்பு விவாதத்தில் பங்கேற்க பாஜ எம்பிக்களுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது பேச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகோய், பிரியங்கா, தீபேந்தர் ஹூடா, மணிப்பூர் எம்பி பிமோல் அகோய்ஜாம் மற்றும் பிரணிதி ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். வந்தே மாதரம் பாடல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபாவில் நாளை (டிசம்பர் 09) வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் நடைபெறும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்திற்கு தலைமை தாங்குவார். மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இரண்டாவது பேச்சாளராக இருப்பார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
2 hour(s) ago | 3
3 hour(s) ago | 1
4 hour(s) ago