உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாரீஸ் நகரில் சிறப்பு பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாரீஸ் நகரில் சிறப்பு பயிற்சி

புதுடில்லி:டில்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் 30 மாணவர்கள், பிரெஞ்ச் பாடத்தில் சிறப்பு பயிற்சி பெற, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகருக்கு சென்றடைந்தனர்.டில்லி அரசுப்- பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, 9 - 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களில் குடும்பத்தின் முதல் தலைமுறையாக பள்ளிப் படிப்பை எட்டுவோரில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 30 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்ச் பாடத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.பாரீஸ் நகரில் வரும் 15ம் தேதி வரை நடக்கும் இந்தப் பயிற்சியின் போது, ஈபிள் டவர் மற்றும் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.நம் நாட்டில் உள்ள பிரெஞ்சு தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. டில்லி அரசுப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழிக் கல்வியை மேம்படுத்த 'அலையன்ஸ் பிராங்காய்ஸ்' நிறுவனத்துடன் டில்லி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை