உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‘ ஸ்பைஸ்ஜெட்’ விமானங்கள் 24 மணி நேரம் தாமதம் பயணியர் போராட்டம்

‘ ஸ்பைஸ்ஜெட்’ விமானங்கள் 24 மணி நேரம் தாமதம் பயணியர் போராட்டம்

புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் செல்ல வேண்டிய, ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் இரண்டு விமானங்கள், 24 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால், ஆத்திரமடைந்த பயணியர் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டில்லி விமான நிலையத்தில் இருந்து மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு தினமும் எஸ்.ஜி. 5111 மற்றும் எஸ்.ஜி. 5105 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எஸ்.ஜி. 5111 விமானம் நேற்று முன்தினம் காலை 7:45 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. அதன் பின் நேற்று காலை 9:00 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. பின், அந்த விமானம் நேற்று மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டது. இதேபோல், எஸ்.ஜி. 5105 விமானம் நேற்று முன்தினம் மாலை 6:45 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. அது நேற்று மதியம் 12:30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பின், இன்று அதிகாலை 1:00 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. தாமதமான இரு விமானங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பயணியர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளையும் விமான நிறுவனம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் குறைகளை கேட்க, ‘ஸ்பைஸ்ஜெட்’ நிர்வாகம் சார்பில் யாரும் அங்கும் இல்லை. அதன் பின் விமான நிலைய ஊழியர்கள் தலையிட்டு பயணியருக்கு உணவு, குடிநீர் மற்றும் ஓய்விடங்களை ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம் அளித்த விளக்கம்: டில்லியில் இருந்து துபாய் செல்லும் இரு விமானங்கள் செயல்பாட்டு காரணங்களால் தாமதமாகின. பாதிக்கப்பட்ட பயணியரை அழைத்துச் செல்ல மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை