உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளையாட்டு வாரிய தலைவர் கர்நாடக அரசு குளறுபடி

விளையாட்டு வாரிய தலைவர் கர்நாடக அரசு குளறுபடி

பெங்களூரு: விளையாட்டு வாரிய தலைவராக, எம்.எல்.ஏ., விஜயானந்த காசப்பனவரை நியமித்ததில், கர்நாடக அரசு குளறுபடி செய்துள்ளது.முதல்வர் சித்தராமையா அமைச்சரவையின், 34 எம்.எல்.ஏ.,க்களை, வெவ்வேறு கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவராக நியமித்து, மாநில அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளது.ஹுன்குந்த் எம்.எல்.ஏ., விஜயானந்த காசப்பனவர், விளையாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கர்நாடக விளையாட்டு வாரிய சட்டப்படி, விளையாட்டுத்துறை அமைச்சரே, வாரிய தலைவராகவும் இருப்பார். அதன்படி அமைச்சர் நாகேந்திரா தலைவராக இருக்கிறார்.விளையாட்டு வாரியத்துக்கு துணைத்தலைவரை மட்டுமே மாநில அரசால் நியமிக்க முடியும். ஆனால் அரசு, எம்.எல்.ஏ., விஜயானந்த காசப்பனவரை, விளையாட்டு வாரிய தலைவராக நியமித்து, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயானந்த காசப்பனவரும் அரசின் செயலால் எரிச்சலடைந்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை