உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் சிக்கினார்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் சிக்கினார்

புதுடில்லி: அண்டை நாடான பாகிஸ்தானுக்காக, உளவு பார்த்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு உளவாளியாக இருந்த, ஆதில் கைது செய்யப்படடார். பல ஆண்டுகளாக டில்லியில் வசிக்கும் ஆதில் மீது ஏற்கனவே போலி பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆதிலிடம் இருந்து பல போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி அடிக்கடி சென்று வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆதிலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை